ஏப்ரல் 1 முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல்.. மாத சம்பளக்காரர்கள் எதிர்கொள்ளும் புதிய மாற்றங்கள்..! By Pugazharasi S

Posted by Admin March 28, 2021

ஏப்ரல் 1 முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல்.. மாத சம்பளக்காரர்கள் எதிர்கொள்ளும் புதிய மாற்றங்கள்..!

https://tamil.goodreturns.in/

இந்தியாவில் நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இது ஊழியர்களின் சம்பளத்தில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தும். இது ஊழியர்களுக்கு சாதகமாகுமா? இது பலன் அளிக்குமா? வாருங்கள் பார்க்கலாம்.

இந்த புதிய தொழிலாளர் சட்டத்தினை அமல்படுத்துவது மூலமாக ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம். ஏனெனில் புதிய தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 
 
வரவிருக்கும் மாற்றங்கள்

New Wage Code Bill மசோதா மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜ்விட்டி, Dearness Allowance, Travel Allowance மற்றும் House Rent Allowance அனைத்திலும் மாற்றம் ஏற்படும். புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜ்விட்டி, Dearness Allowance, பயணப் படி மற்றும் ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் என அனைத்தும் 50%க்கு மேல் இருக்காது.

 
Basic Salary அதிகரிக்கும்

புதிய தொழிலாளர் விதியின் படி, அடிப்படை சம்பளத்தின் பங்கு 50% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் 50%-க்கு குறைவாக இருந்தால் அவை விரைவில் மாறிவிடும், மேலும் உங்களது அடிப்படை சம்பளத்துடன் சிடிசி (CTC) மேலும் அதிகரிக்கும். பல நிறுவனங்களும் அடிப்படை சம்பளத்தினை மிகக் குறைவாக கொடுத்து, மற்ற அலவன்சுகளை அதிகமாக கொடுத்து வருகின்றன. இனி அதெல்லாம் குறையும். மாறாக உங்களது அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்.

 
 
சேமிப்பு தொகை அதிகரிக்கும்

புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின் உங்களது Take Home Salary குறைவாக இருக்கும். எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அடிப்படை சம்பளம் 50%-க்கு கீழ் இருக்கும் போது, அந்த சம்பளத்தில் தான் 12 + 12 = 24% வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும். ஆனால் புதிய விதிகளின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். ஆக உங்கது அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது, பிஎஃப் தொகை செலுத்துவதும் அதிகரிக்கும். இதனால் வருங்கால வைப்பு நிதிக்கு செல்லும் தொகை அதிகரிக்கும். இதனால் உங்கள் சேமிப்பு பெருகும்.

 
அலவன்ஸ்கள் குறையும்

உதாரணத்திற்கு ஒரு ஊழியரின் சம்பள விகிதம் 1 லட்சம் ரூபாய் என வைத்துக் கொண்டால், அதில் சம்பளதாரரின் மற்ற அலவன்ஸ்கள் 50,000 ரூபாய்க்கு மேல் இருக்க முடியாது. ஆனால் அவரின் அடிப்படை சம்பளம் 50,000 ரூபாயாக இருக்கும். ஏனெனில் இந்த அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்கும்பொருட்டு நிறுவனங்கள் மற்ற அலவன்ஸ்களை குறைக்க முயலும்.

 
 
Take home salary குறையும்

இந்த புதிய விதிகளால் உங்களது சேமிப்புகள் அதிகரிக்கும் என்பது நலல் விஷயமாக பார்க்கப்படாலும், Take home salary என்பது குறையும். உதாரணத்திற்கு ஒரு நபரின் சம்பளம் தற்போது 1 லட்சம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். தற்போது அவரின் அடிப்படை சம்பளம் 40,000 எனில், ஊழியரும், ஊழியருக்காக நிறுவனமும் தலா பிஎஃப்க்கு 4800 ரூபாய் கொடுப்பார்கள். ஆக தற்போது அந்த ஊழியரின் Take home salary என்பது 90,400 ரூபாயாக இருக்கும்.

 
கிராஜ்விட்டி தொகை அதிகரிக்கும்

ஆனால் புதிய சட்டத்தின் படி, அடிப்படை சம்பளம் 50,000 ரூபாயாக ஆக உயர்ந்தால், அவரின் பிஎஃப் பங்களிப்பு தலா 6,000 ரூபாயாக அதிகரிக்கும். இதனால் ஊழியரின் Take home salary என்பது 88,000 ரூபாயாக இருக்கும். ஆக முன்பை விட 2,400 ரூபாய் குறையும். அதோடு அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது கிராஜ்விட்டியும் அதிகரிக்கும். ஏனெனில் ஒவ்வொரு வருட சேவைக்கும் கடைசியாக கொடுக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தின் 15 நாட்களுக்கு சமமான தொகையாக நிறுவனங்கள் கிராஜ்விட்டியாக கொடுக்கும். ஆக அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் என்பதால், இந்த கிராஜ்விட்டி தொகையும் அதிகரிக்கும்.

 
பலருக்கும் கிராஜ்விட்டி சலுகை கிடைக்கும்

புதிய தொழிலாளர் சட்டங்களில் கிராஜ்விட்டியும் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ஏற்கனவே இருந்த விதிகளின் படி 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கிராஜ்விட்டி வழங்கப்படும். ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தின் படி, 1 ஆண்டு பணிபுரிந்தாலே கிராஜ்விட்டி வழங்கப்படும். ஆக இதனால் பெரும்பாலான ஊழியர்கள் பயன்பெறுவர்.

 
சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

7th Pay Commission: 2021 ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியக் குறியீடு மசோதா அமல்படுத்தப்பட்ட பின்னர், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கக்கூடும். இந்த சட்டங்களின் படி, உங்களது Take Home Salary குறையும், ஆனால் பிஎஃப் மற்றும் கிராச்சுட்டியின் பங்களிப்பு அதிகரிக்கும், இதன் காரணமாக நீங்கள் நீண்ட காலத்திற்கு பயன் பெறலாம். இது உங்களுக்கு தற்போதைக்கு சிரமமாக தோன்றினாலும், பிற்காலத்தில் மிக நல்ல விஷயமாக தோன்றலாம். அதிலும் மிகப்பெரிய அளவில் சம்பளம் வாங்குபவர்களுக்கு டேக் ஹோம் சம்பளம் வெகுவாக குறைய வாய்ப்பிருக்கிறது.

 
வரி சலுகை குறையலாம்

பட்ஜெட் 2021ல் பழைய விதிமுறைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தது எனலாம். ஒரு புதிய திருத்தத்தினை கொண்டு வந்தது. அதன் படி ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு வரி விதிக்கப்படும். பொதுவாக இந்த திட்டம் வரி சலுகை உண்டு என்பதால் தான் பலரையும் ஈர்க்கிறது. ஆக சம்பளதாரர்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்படலாம். ஆனால் தற்போது புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் அடிப்படை ஊதியம் அதிகரிப்பதால், அதிக சம்பளம் வாங்குவோருக்கு இது தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

 
வரி விலக்கு குறையும்

ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அதிகரிக்கும் என்பதால், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) குறையும். இதனால் HRAந் கீழ் கோரப்படும் வரி விலக்கு குறையும். ஆக மொத்தத்தில் ஊழியர்களின் வருங்கால ஓய்வூதியம் அதிகரிக்கும் என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும் அதிகளவில் சம்பளம் வாங்கிவோருக்கு வரி சலுகை குறையும். மேலும் டேக் ஹோம் ஊதியமும் குறையும். ஆக ஊழியர்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. எப்படி இருப்பினும் இந்த விதிகள் அமலுக்கு வந்து, முதல் மாத சம்பளம் வாங்கும்போது தான் எந்த மாதிரியான மாற்றங்கள் வரபோகின்றனர் என முழுமையாக தெரியும்.

நன்றி

https://tamil.goodreturns.in/