2004-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திரு. வ.அய். சுப்பிரமணியன், திரு. ச.அகத்தியலிங்கனார், திரு. ச.வே.சுப்பிரமணியனார், திரு. சோ.ந. கந்தசாமி எனும் நான்கு தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடிக்கலந்தாய்ந்து நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் 41 தமிழ் இலக்கியங்கள் தொகை வகை செய்யப்பட்டன.
அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட 41 நூல்ககளும் ``செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்'`` என்ற தலைப்பில் ஒரே நூலாக வரிவடிவில் பதப்பிரிப்புச் செய்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டித் தமிழ்ப்பல்கலைக்கழகம் வாயிலாக சூன் 2010-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன.
இருக்கும் செம்மொழி இலக்கியங்கள் 41-யும் சேர்த்து ஒரே நூலாக அச்சிட்டு வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். பழந்தமிழ் நூல்களின் மூலங்கள் பார்வையில் பாடவேறுபாடுகளுடன் வெளி வந்துள்ள இத்தொகுப்பு இந்நூற்றாண்டின் முதற்பெருந்தொகுப்பு நூலாகும். இப்பதிப்பு, பதப்பிரிப்புச் செய்த பதிப்பாகும். அதனால் எளிதாகக் கற்க இயலும். சிறு முயற்சியினாலேயே பொருளுணரவும் முடியும்.
மேலும், இந்நூல் பிலிப்பைன்சு நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட தரமான தாளில் 1588 பக்கங்களில் கெட்டி அட்டையிட்ட நேர்த்தியான ஏட்டுக்கட்டுமானத்தில் மிகவும் மலிவுப்பதிப்பாக உரூபா 300/-க்குக் கிடைக்கிறது.
தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைகழகம் வெளியிட்டுள்ள இந்த அரிய நூலின் பதிப்பாசிரியராகத் திகழ்பவர் பேராசிரியர் ம.வே.பசுபதி ஆவர். இவர், திருப்பனந்தாள் காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் கலைக்கல்லூரியின் பணி நிறைவு பெற்ற முதல்வர் ஆவர்.
வாருங்கள் .... இந்த நூலில் அடங்கியுள்ள அந்த 41 இலக்கியங்களை பின்வருமாறு காண்போம்.
01. தொல்காப்பியம்
02. பத்துப்பாட்டு
02. 01. திருமுருகாற்றுப்படை
02. 02. பொருநராற்றுப்படை
02. 03. சிறுபாணாற்றுப்படை
02. 04. பெரும்பாணாற்றுப்படை
02. 05. முல்லைப்பாட்டு
02. 06. மதுரைக்காஞ்சி
02. 07. நெடுநல்வாடை
02. 08. குறிஞ்சிப்பாட்டு
02. 09. பட்டினப்பாலை
02. 10. மலைபடுகடாம்
03. எட்டுத்தொகை
03. 01. நற்றிணை
03. 02. குறுந்தொகை
03. 03. ஐங்குறு நூறு
03. 04. பதிற்றுப்பத்து
03. 05 பரிபாடல்
03. 06. கலித்தொகை
03. 07. அகநானூறு
03. 08. புறநானூறு
4. கீழ்க்கணக்கு
04. 01. திருக்குறள்
04. 02. நாலடியார்
04. 03. பழமொழி நானூறு
04. 04. நான்மணிக்கடிகை
04. 05. இன்னா நாற்பது
04. 06. இனியவை நாற்பது
04. 07. கார் நாற்பது
04. 08. களவழி நாற்பது
04. 09. ஐந்திணை ஐம்பது
04. 10. ஐந்திணை எழுபது
04. 11. திணைமொழி ஐம்பது
04. 12. திணைமாலை நூற்றைம்பது
04. 13. திரிகடுகம்
04. 14. ஆசாரக்கோவை
04. 15. சிறுபஞ்சமூலம்
04. 16. முதுமொழிக்காஞ்சி
04. 17. ஏலாதி
04. 18. கைந்நிலை
05. காப்பியங்கள்
05. 01. சிலப்பதிகாரம்
05. 02. மணிமேகலை
06. முத்தொள்ளாயிரம்
07. இறையனார் அகப்பொருள்
இல்லந்தோறும் இருக்க வேண்டிய அரிய நூல்,
பதிப்பாசிரியர் திரு ம.வே.பசுபதி அவர்களின் அயராத உழைப்பு,
தமிழ்ப்பல்கலைக்கழகம் மேற்கொண்ட பெரும் முயற்சியின் விளைபலன்.
நழுவவிடாதீர்கள்....
இப்பொழுதே இந்த வலைத்தளத்திலேயே புத்தக ஆணை விடுக்கவும். அதற்கு என் மீது சொடுக்கவும்; வாங்குவதற்கான இணைப்பு பக்கத்திற்கு செல்லலாம்.
Tanjavore Tamil University, Ma.Ve.Pasupathi, Literature