தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப்பணிகளில் அடங்கிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 761 "சாலை ஆய்வாளர்" பதவியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அண்மையில் வெளியிட்டது.
இப்பதவிக்கான தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. தாள் I-ல் வரைவாளர் (சிவில்) தொடர்பான கொள்குறிவகை வினாக்களும், அடுத்து வரும் தாள் II-ல் கட்டாயத் தமிழ் மொழி தகுதிக்கானதும் மற்றும் பொது அறிவு & திறனாய்வுக்கானதுமான கொள்குறிவகை வினாக்களும் இடம்பெறும்.
இத்தேர்வை ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதலாம். இதற்கு உதவிடும் முகமாக இரண்டு கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன. ரூ.19500 - ரூ 71900/- என்ற சம்பள ஏற்ற முறை உள்ள இந்த சாலை ஆய்வாளர் பதவி தேர்வில் வெற்றி பெற இந்த கையேடுகள் பெரிதும் உதவும். கையேடுகள் பற்றிய மேலதிக விவரங்களை அறிந்து அவற்றை வாங்க பின்வரும் அட்டைப்படங்களின் மீது சொடுக்குக.