AIBE (All India Bar Examination) - Bare Acts with SHORT NOTES / LEAST NOTES will also be allowed - AIB தேர்வில் சிறு குறிப்புகள் மற்றும் குறைந்தளவு குறிப்புகள் அடங்கிய சட்டப்பிரிவு புத்தகங்களையும் தேர்வு அறைக்குள் எடுத்துக்கொண்டு செல்ல விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர்

Posted by Admin February 03, 2023

AIB தேர்வில் சிறு குறிப்புகள் மற்றும் குறைந்தளவு குறிப்புகள் அடங்கிய சட்டப்பிரிவு புத்தகங்களையும் தேர்வு அறைக்குள் எடுத்துக்கொண்டு செல்ல விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் அனைத்திந்திய வழக்குரைஞர் பெருமன்ற தேர்வில் வெறும் சட்டப்பிரிவுகள் மட்டும் அடங்கிய (அதாவது சிறுகுறிப்புகள் ஏதுமில்லாத) சட்ட புத்தகங்களை (Bare Act Books WITHOUT Short Notes) தேர்வு அறைக்கு விண்ணப்பதாரர்கள் எடுத்து கொண்டு செல்லலாம் என்று ஆரம்பத்தில் இந்திய வழக்குரைஞர் பெருமன்றம் தனது வலைதளமான https://allindiabarexamination.com-ல் அறிவித்திருந்தது. இதனால் அத்தகு சட்டப்புத்தகங்கள் அனைத்தும் இந்திய முழுவதும் விற்று தீர்ந்து அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து குறைந்தளவு குறிப்புகள் அடங்கிய சட்டப்பிரிவு புத்தகங்களை (Bare Acts WITH Least Notes) தேர்வு அறைக்குள் எடுத்துக்கொண்டு செல்ல விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர் என்று மேற்படி வலைத்தளத்தில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அண்மைச் செய்தியாக தற்போது சிறு குறிப்புகள் மற்றும் குறைந்தளவு குறிப்புகள் அடங்கிய சட்ட புத்தகங்களையும் (Bare Act Books WITH Short Notes/Least Notes) தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் எடுத்துக்கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று மேற்படி வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சிலரின் கோரிக்கையை ஏற்று இவ்வாறு அனுமதித்துள்ளதாக இந்திய வழக்குரைஞர் பெருமன்றம் கூறுகின்றது.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக AIB தேர்வு நடத்தப்படாமல் இருந்து இந்த 2023-ஆம் நடத்தப்படுவதால் இத்தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துவிட்டது. இதனால் தேர்வு அறைக்குள் எடுத்துக்கொண்டு சென்று பார்வையிட்டு விடை எழுத வகை செய்யும் சிறு குறிப்புகள் ஏதுமில்லாத சட்டப்பிரிவுகள் மட்டும் அடங்கிய சட்டப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக இந்திய வழக்குரைஞர் பெருமன்றம் தனது நிபந்தனையை படிப்படியாக தளர்த்திக்கொண்டு தற்போது சிறு குறிப்புகள் அடங்கிய சட்டப்பிரிவு புத்தகங்ளையும் கொண்டு செல்லலாம் என்று அறிவித்திருப்பதாக தெரிகின்றது.

Candidates will also be allowed to carry copies of Bare Acts and Downloaded copies of Acts without notes but if such copies are not available then copies of bare acts with short notes/least notes will be allowed on the basis of prayer by some candidates - Scrolling notification on website https://allindiabarexamination.com

 

Most Relevant Product

The Bharatiya Sakshya Adhiniyam, 2023 (47 of 2023) | Repealing The Indian Evidence Act, 1872 (1 of 1872) | with Special Highlights & Features of the New Provisions | Comparative Tables | Bare Act with Comments | Latest

Private Schools Regulation Laws in TAMIL NADU with NOTES and CASE LAWS (A Compendium of Acts and Rules relating to Private Schools in TAMIL NADU with Notes and Case Laws)

Essential Commodities Act, 1955 (Act No. 10 of 1955)

Tamil Nadu Private Schools (Regulation) Act 2018 & Rules 2023 | தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் 2018 மற்றும் விதிகள் 2023 | சட்டம் மற்றும் புதிய விதிகளுடன் மேலும் பல சட்ட திட்டங்கள் அடங்கிய நூல் | இப்போது பரபரப்பான விற்பனையில்....

COMBO SALES OF 4 Important Books - [(1) House Building Advance (English); (2) The TN Travelling Allowance Rules (English); (3) The GPF (TN) Rules (English); and (4) தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள் 1973 (The TN Govt. Servant's Conduct Rules 1973)]

MADRAS HIGH COURT APPELLATE SIDE RULES - Applicable to the Madras High Court & Madurai Bench - Provisions & Procedure to file First Appeal, Second Appeal, LPA, CMA, Tax Appeals, Revisions, Review etc.