GST/சேவை வரி கட்டுவதிலிருந்து வழக்குரைஞர்கள் விலக்கப்பட்டவர்கள்; சேவை வரி கட்டக்கோரி அவர்களுக்கு கேட்பு அறிவிப்பு ஏதும் அனுப்பக்கூடாது - ஒடிசா உயர் நீதிமன்றம் GST ஆணையாளருக்கு ஏவுரை

Posted by Admin April 09, 2021

சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டத்தின்படி சேவை வரி கட்டக்கோரி அறிவிப்பு எதையும் சட்டத்தொழில் செய்து வரும் வழக்குரைஞர்களுக்கு அனுப்பக்கூடாது என்றும், இது குறித்த தெளிவான அறிவுறுத்தல்களை GST அலுவலர்களுக்கு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஒடிசா உயர் நீதிமன்றம் Devi Prasad Tripathy v. The Principal Commissioner, CGST and Central Excise Bhubaneswar and others என்ற வழக்கில் அண்மையில் GST ஆணையாளருக்கு ஏவுரைத்துள்ளது.

2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஓர் அறிவிக்கையின்படி, வழக்குரைஞர் ஒருவர் ஆற்றிய சட்டப்பணிகளுக்காக அவர் சேவை வரி ஏதும் (NIL) செலுத்த வேண்டிய வேண்டியதில்லை. சேவை வரி கட்டுவதிலிருந்து வழக்குரைஞர்கள் விலக்கப்பட்டவர்கள். அவ்வாறு இருக்க சேவை வரி கட்டக் கோரி வழக்குரைஞர்களுக்கு GST துறை கேட்பு அறிவிப்பு அனுப்பி அவர்களை தொந்தரவு செய்து வந்தது. அப்படி ஒரு அறிவிப்பு கிடைக்கப் பெற்ற தேவி பிரசாத் திரிபாதி என்ற வழக்குரைஞர் ஒடிசா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிப்பேராணை மனுவில் மேற்கண்ட அறிவிக்கை மற்றும் கேட்பு அறிவிப்பை ஆராய்ந்த மாண்பமை தலைமை நீதியரசர் டாக்டர் எஸ்.முரளிதர் மற்றும் நீதியரசர் பி.ப்பி.ரவுட்ராய் அடங்கிய ஆயம், அவ்வாறு அறிவிப்பு எதையும் வழக்குரைஞர்களுக்கு அனுப்பக்கூடாது என்பதற்கு GST ஆணையாளர் உரிய அறிவுறுத்தல்களை தங்கள் துறை அலுவலர்களுக்கு பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 31/03/2021 அன்று ஆணை பிறப்பித்து.

கட்டுரையாளர் : பி.ஆர்.ஜெயராஜன்

முழுமையான தீர்ப்புரையை வாசிக்க பின்வரும் இணைப்பின் மீது சொடுக்குக :

Full Judgment