IPC, CrPC, IEA - பெயர் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் விரைவில் மாறவிருக்கும் முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் |

Posted by Admin August 11, 2023

 

பாரதிய நியாய சன்ஹிதா - இந்திய தண்டனைச்சட்டம்,
பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா - இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம்,
பாரதிய சாக்ஷ்யா - இந்திய சாட்சிய சட்டம்
 
பெயர் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் விரைவில் மாறவிருக்கும் முப்பெரும் குற்றவியல் சட்டங்கள்

 

இந்திய தண்டனை சட்டத்தை மொத்தமாக மாற்றி இனி பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சட்ட திருத்தத்தில் சேர்க்கப்பட்டு உள்ள புதிய தண்டனை விவரங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா மூலம் இந்த சட்ட திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் பல முக்கியமான விதிகள், தண்டனைகள் மாற்றப்பட்டு உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம் நீக்கப்பட்டு, அதாவது ஐபிசி குற்றவியல் நடைமுறைகள் நீக்கப்பட்டு புதிய பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

புதிய சில சட்டங்கள்: இதில் புதிய பல சட்டங்கள், விதிகள், தண்டனைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

1. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அல்லது நிர்வாக அல்லது பிற நடவடிக்கைகளின் மீது எதிர்ப்பை வெளிப்படுத்தும் கருத்துக்கள் தெரிவித்தால் அது குற்றமாகும்.

2. வேண்டுமென்றே அல்லது தெரிந்தே, வார்த்தைகளால், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட, , அல்லது காட்சிகள் மூலம், அல்லது மின்னணு தகவல் தொடர்பு மூலமாகவோ, அல்லது வேறுவிதமாகவோ, அரசுக்கு எதிரான செயல்பாடுகளை தூண்டுதல் என்பது குற்றமாகும். பிரிவினை அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது நாசகார நடவடிக்கைகளை, அல்லது பிரிவினைவாத நடவடிக்களை செய்தல், ஊக்குவித்தல் அல்லது இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுப்பதால் குற்றமாகும்.

அத்தகைய செயலில் ஈடுபட்டாலோ அல்லது செய்தாலோ ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என்று இந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது அரசுக்கு எதிராக கிளிர்ச்சி செய்ய நினைத்தால் 1 ஆயுள் சிறை அல்லது 7 ஆண்டு சிறை அல்லது அபராதம் இந்த சட்டத்தின் பிரிவு 150ன் கீழ் விதிக்கப்படும்.

3. அமெரிக்காவில் இருப்பது போல தண்டனைகளுக்கு அபராதத்தோடு சேவை செய்வதையும் தண்டனையாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சிறிய தண்டனைகளுக்கு இதுவரை அபராதம் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இனி அபராதம் வழங்கப்படும் அல்லது மக்களுக்கு குறிப்பிட்ட துறையில் சம்பளம் இன்றி சேவை செய்யும் வகையில் தண்டனை கொடுக்கப்படும்.

உதாரணமாக ஒருவர் சிறிய குற்றம் ஒன்றை செய்துவிட்டார் என்றால் அவருக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது கேன்சர் நோயாளிகளுக்கு 2 மாத மருந்து செலவை ஏற்க சொல்லி தண்டனை கொண்டு வரலாம். இந்த புதிய முறை இதில் சேர்க்கப்பட்டு உள்ளது.

4. அதேபோல் சில சட்டங்களில் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு வேறு தண்டனைகள் என்ற விதிகள் நீக்கப்பட்டு உள்ளது. அதாவது சில சட்டங்களுக்கு மட்டும் பாலின ரீதியிலான தண்டனை வேறுபாடு நீக்கப்பட்டு, எல்லா பாலினத்தவருக்கும் ஒரே தண்டனை என்ற விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. இது போக தீவிரவாதத்திற்கு எதிரான விதிகள், தண்டனைகள் பல மாற்றப்பட்டு உள்ளன.

5. இந்த புதிய சட்டத்தின்படி, மின்னணு சாதனங்களை சாட்சியங்களாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மின்னணு சாதனங்கள் சில குற்றங்களில் கோர்ட்டில் சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படாது. அதை மாற்றுவதற்கான விதிகள் இதில் சேர்க்கப்பட்டு உள்ளன.

6. இந்த புதிய சட்டத்தில் உள்ள பெரும்பாலான சட்டங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் "அரசுக்கு எதிரான குற்றங்கள்" ஆகியவற்றுக்கான சட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

7. பல்வேறு குற்றங்களுக்கான அபராதம் மற்றும் தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

8. இந்தியாவில் போலீஸ், கோர்ட் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் கடைபிடிக்கப்பட்டு வரும் மொத்த தண்டனை சட்டமும் இதன் மூலம் மாற்றப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய சாக்ஷ்யா ஆகியவை இனி கடைபிடிக்கப்படும் என்று இந்த சட்ட திருத்த மசோதாக்கள் அறிவித்துள்ளன.

9. இந்த சட்டங்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்படவில்லை. உள்ளே இருக்கும் பல அடிப்படை கூறுகள், அடிப்படை அமைப்புகளும் மாற்றப்பட்டு உள்ளன.

10. இந்த சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் போலீசார் இனி இந்திய தண்டனை சட்டத்திற்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தை பயன்படுத்துவார்கள். இதை புரிந்து கொள்ள போலீசார், வக்கீல்கள், மக்களுக்கு சில காலம் எடுக்கும் என்பதால் குற்றவியல் நடவடிக்கைகளில் செயல்பாடுகள் தாமதம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.

 

நன்றி | Courtesy

By Shyamsundar | Oneindia

மேலதிக விவரங்களுக்கு

https://m.dailyhunt.in/news/india/tamil/