Staff Selection Commission 2023 Notification:
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 11409 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது. மல்டி டாஸ்கிங் மற்றும் ஹவால்தார் பதவிக்கான [MTS & Havaldar (CBIC & CBN)] இந்த அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் https://ssc.nic.in/ காணலாம்.
இவற்றில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) பணிக்கு 10,880 காலியிடங்களும், ஹவால்தார் பணிக்கு 529 காலியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வில் தேர்வானவர்கள் CBN மற்றும் CBIC (வருவாய்த் துறை) துறைகளில் உள்ள பிரிவுகளில் இந்தியா முழுவதும் பணியமர்த்தப் படுவார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு MTS பதவிக்கு 18-25 க்குள்ளும், ஹவால்தாருக்கு 18-27 க்குள்ளும் இருக்கவேண்டும்.
தேர்வுக்கான முக்கிய வழிமுறைகள்
இந்த தேர்வானது கணினி வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
கணினி மூலம் நடத்தப்படும் இந்த தேர்வானது இந்தி, ஆங்கிலம் மற்றும் 13 தேசிய மொழிகளில் (தமிழ் உட்பட) இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும்.
தேர்வாளர்கள் கட்டாயம் இரண்டு அமர்வு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். அமர்வு (I அல்லது II) விடை அளிக்காத தேர்வாளர்கள் தகுதி இழப்பதாக கருதப்படுவார்கள். இந்த தேர்வானது கொள்குறி வகையிலும், அமர்வு - Iல் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அமர்வு - IIவில் அடங்கிய விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.