இரத்து செய்யப்பட முடியாத ஏற்பாட்டாவணத்தை இரத்து செய்ய என்ன வழி ?

Posted by Admin June 07, 2020

நிபந்தனையற்றதும், இரத்து செய்யப்பட முடியாததுமான ஏற்பாட்டாவணத்தை இரத்து செய்ய என்ன வழி ?

அசையாச் சொத்தொன்றை வகை செய்து வழங்கும் ஏற்பாட்டாவணத்தை (செட்டில்மெண்ட் டீட்) ஒருதலைப்பட்சமாக இரத்து செய்தல் - அந்த ஏற்பாட்டாவணத்தில் நிபந்தனை ஏதும் இல்லை. மேலும் அது இரத்து செய்யப்பட முடியாததும் ஆகும் - இந்நிலையில் அப்படிப்பட்ட இரத்து ஆவணத்தை சார் பதிவாளர் அலுவலகம் பதிவு செய்தது பொதுக் கொள்கைக்கு எதிரானதாகும். - தீர்வழி யாதெனில், அந்த ஏற்பாட்டாவணத்தை (செட்டில்மெண்ட் டீட்) இரத்து செய்ய உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுவதேயாகும்.

சென்னை உயர் நீதிமன்றம் காட்டும் தீர்ப்பு நெறி - நிபந்தனையற்ற, இரத்து செய்ய முடியாத ஏற்பாட்டவணத்தை (செட்டில்மெண்ட் பத்திரத்தை) இரத்து செய்ய உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுக.

Registration Act 1908 (16 of 1908) - Transfer of Property Act, 1882 (4 of 1882), Section 156 - Unilateral cancellation of registered Settlement Deed - Settlement Deed unconditional and irrevocable - Against public policy to register cancellation of such Settlement Deed - Remedy is to approach Civil Court to have Settlement Deed set aside.

மேற்கோள்  : 2014 (3) CTC 113