மின் கட்டண நோக்கத்திற்காக "லா சேம்பர்" என்பது "லா ஃபர்ம்" என்பதிலிருந்து வேறுபட்டதாகும்

Posted by Admin June 18, 2020


ஒரு வழக்குரைஞர் வீட்டுச் சொத்தொன்றில் தனது அலுவலகம் வைத்திருந்தால், அது வணிகச் சொத்தாகாது என்றும், அதற்கு வீட்டுச் சொத்திற்குரிய மின் இணைப்பு தர வேண்டும் என்றும் அண்மையில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் நீதிப்பேராணை மனு ஒன்றில் தீர்ப்புரைத்துள்ளது.

அது தனது தீர்ப்பில் "வழக்குரைஞர் தொழிலை ஓர் வணிகச் செயற்பாடாக கருத முடியாது" ("... it is crystal clear that the profession of a lawyer cannot be termed as a commercial activity.") என்று சட்ட விளக்கமளித்துள்ளது.

இவ்வழக்கிற்காக பல்வேறு முன் தீர்ப்பு நெறிகளை ஆராய்ந்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மாண்பமை நீதியரசர் சேகர் பி. சராஃப் தனது தீர்ப்பில் கூறுகையில் "வீட்டின் ஒரு பகுதியை வழக்குரைஞர் அறையாக (Law Chamber) பயன்படுத்துவது என்பது, சட்டம் மற்றும் இதர பல்வேறு பணிகளுக்காக வணிக வளாகம் ஒன்றில் பல வழக்குரைஞர்களை கொண்டு அல்லது ஒரே வழக்குரைஞர் அதன் உரிமையாளராக இருந்து தனியாக நடத்தப்படும் சட்ட நிறுமம் (Law Firm) ஒன்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்" என்று முக்கிய கருத்துரைத்தார். தனது சட்டத்தொழில் பிழைப்பிற்காக வீட்டில் அலுவலகம் வைத்திருக்கும் வழக்குரைஞரின் சார்பாகவே சட்டப்பொருள் விளக்கத்தின் பலனைத் தர வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முழு தீர்ப்புரையையும் வாசிக்க, - Read Full Judgment என்பதன் மீது சொடுக்குக

 

IN THE HIGH COURT AT CALCUTTA
Constitutional Writ Jurisdiction
Appellate Side

Present:
The Hon’ble Justice Shekhar B. Saraf

W. P. No. 18367 (W) of 2019

Arup Sarkar

Versus

C.E.S.C. Limited & Ors.

For the Petitioner :
Mr. Subir Sanyal
Mr. Usof Ali Dewan
Mr. Soumyajit Das Mahapatra
Mr. Kaustav Bagchi
Mr. Asif Dewan

For the Respondent CESC Ltd. : Mr. Rajiv Lall

Heard on : 19.11.2019, 17.12.2019 & 21.01.2020

Judgment on : 11.02.2020

 

 

To buy Criminal Procedure Code, Click CrPC

To buy Indian Penal Code, Click IPC