விரல்களின் வினோத குணாதிசயங்கள் - பிஆர்ஜெ

Posted by Admin January 04, 2021

நமது இதயத்துடன் நேரடியாகத் தொடர்புடையது, மோதிர விரல்.

இதயபூர்வமான விடயங்களுக்கு மோதிர விரலை நன்கு பயன்படுத்தலாம். இதனால்தான் திருமண அல்லது நிச்சயதார்த்த அச்சார மோதிரமானது, மோதிர விரலில் அணிவிக்கப்படுகிறது.

மேலும் அன்பு, பாசம் மற்றும் படைப்பாற்றலுக்கு அதிபதி மோதிர விரலேயாகும்.

மோதிர விரல் நுனியில் விபூதி, குங்குமத்தைத் தொட்டு நெற்றியின் நடுவில் அழுத்தமாக வைத்துவர, மனதில் நினைத்த செயலை நடத்தி முடிக்கும் உறுதி பிறக்கும்.
 
இதே போன்று மோதிர விரலால் மற்றவர்கள் நெற்றியில் பொட்டு வைத்தால், அவர்களது இதயத்தை பொட்டு வைப்பவரின் இதயம் கவர்ந்துவிடும். அதாவது பொட்டு வைத்தவரின் இதயத்திற்கு வசப்பட்டுவிடும். எனவே மற்றவர்கள் தங்கள் மோதிரவிரல் நுனியை நமது நெற்றியின் மையத்தில் தேவையின்றி வைக்க அனுமதிக்கக் கூடாது. 'எண்ணக் கடத்தியாக' மோதிர விரல் நுனி செயற்படுகிறது.

மோதிர விரலில் (சந்திரக்) கல் [முத்து இரத்தினம் (நீல வண்ணம்)] வைத்த மோதிரம் அணிவது சிறப்பு. அந்தக் கல்லுக்குரிய சக்தி இதயத்தில் விரைவாக ஏறி உடல் முழுக்க பரவும்; ஆளுமைப்படுத்தும். குறிப்பாக வலது கை மோதிர விரலில் மோதிரம் அணிந்தால் எதிலும் வாய்ப்பைக் கண்டறியும் ஆற்றல் அதிகரிக்கும்.