ஒரு பெண் ஒரு ஆணை வல்லுறவு கொண்டால் ...? இந்திய தண்டனை சட்டத்தில் வரவுள்ள திருத்தம் ? ? ?

Posted by Admin January 19, 2021

இந்தச்சேதி இந்திய தண்டனைச்சட்டம் உள்ளிட்ட முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் விரைவில் செயல்விளைவுக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள குற்றவியல் திருத்தச்சட்டத்தின் மீது என் கவனத்தை ஈர்க்கிறது.

இப்படி நடக்குமா என்று சிந்திக்கும் வேளையில், "இப்படி நடந்து விட்டதே", அதற்கு சட்டத்தீர்வழி யாது என்பதை யோசிக்க வைக்கிறது. அதாவது,

ஒரு ஆண் ஒரு பெண்ணை வலுக்கட்டாய உடலுறவு கொண்டால் அதை வல்லுறவு/வன்புணர்வு/கற்பழிப்பு என இதச கூறுகிறது. அதே ஒரு பெண் ஒரு ஆணை வல்லுறவு கொண்டால், ஓர் ஓரினச் சேர்க்கையாளர் இன்னொரு ஓரினச் சேர்க்கையாளரை அல்லது இருபாலினத்தவரில் யாரேனும் ஒருவர், மூன்றாம் பாலினத்தவராக சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட திருநங்கையை வல்லுறவு கொண்டால், அது வன்புணர்வாகாதா? நிச்சயமாக ஆகும்.

பாலியல் குற்றங்களில் பால்/பாலின (Sex/Gender) வேறுபாடு காட்டக்கூடாது என்ற அடிப்படையில் இந்திய தண்டனைச்சட்டத்தை உரியவாறு திருத்தி மேற்சொன்ன செயல்களையும் வன்புணர்வு குற்றச்செயல்களாக்க "குற்றவியல் சட்டம் (திருத்தச்) சட்டம்" ஓராண்டுக்கு முன்னரே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது செயல்விளைவுக்கு வந்தால் செய்தியில் கண்ட செயல் ஒரு பெண் ஒரு ஆணின் கற்பை சூறையாடி வல்லுறவு கொண்ட குற்றச்செயலாகும்.

- ©️ P.R.Jayarajan
www.shripathirajanpublishers.com