| தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் |

Posted by Admin February 24, 2023

உச்சநீதிமன்றத்தில் தினசரி நடக்கும் வழக்குகள் குறித்த விவரங்கள் இணையம் மூலம் அறிந்துகொள்ள ஏற்கனவே பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், தீர்ப்புகள் குறித்த விவரங்கள் நீதிபதிகள் கையெழுத்திட்ட உடன் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. தீர்ப்பு வெளியான நாள், வாதி, பிரதிவாதியின் பெயர், வழக்கு எண் போன்றவைகள் இணையத்தில் விவரமாக பதிவிடப்பட்டு வருகிறது. இச்சூழலில் இணையத்தில் தீர்ப்பினை மிக எளிதாக அறிந்துக்கொள்ள கூடுதலாக ஓர் வசதி செய்யப்படவுள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் நேற்று(பிப்.,23) ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

30,000 தீர்ப்புகளுக்கு பிரத்யேக எண்கள்

இந்த அறிவிப்பு குறித்து அவர் கூறியதாவது, உச்சநீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளுக்கும் தனித்துவமான எண்கள் வழங்கப்படவுள்ளது.இதன் முதற்கட்டமாக 2014ம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி 1ம் தேதி வரையிலான தீர்ப்புகளுக்கு தனித்துவ எண் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அவர் கூறியபடி பார்த்தால், 30,000 தீர்ப்புகளுக்கு பிரத்யேகமாக எண் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும், இரண்டாம் கட்டமாக 1995 முதல் 2013வரையிலான தீர்ப்புகளுக்கும், மூன்றாம் கட்டமாக 1950ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரையிலான தீர்ப்புகளுக்கும் தனித்துவ எண்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி: Newsbytes

https://tamil.newsbytesapp.com/news/india/specific-numbers-to-get-verdict-details-online-sc-judge/story