"தமிழர் நாகரிகமும் தமிழ் மொழி வரலாறும்"
16 தமிழறிஞர்களின் அரிய 21 நூல்களின் தொகுப்பு | 4200 பக்கங்கள் அடங்கிய 10 தொகுதிகளில் | விலை ரூ. 2800
தொகுதி, நூல் தலைப்பு மற்றும் ஆசிரியர் விவரம் புத்தகவாரியாக வருமாறு:-
தொகுதி 1-இல் (1) தமிழக ஆற்றங்கரை நாகரிகம் I - டாக்டர் மா.இராசமாணிக்கனார் (காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை, பொருநை), தொகுதி 2-இல் (2) தமிழக ஆற்றங்கரை நாகரிகம் II - பேராசிரியர் டாக்டர் சுந்தரசண்முகனார் (கெடிலம், காவிரி), தொகுதி 3-இல் (3) தமிழர்கள் இல்வாழ்க்கை - டாக்டர் மா.இராசமாணிக்கனார், (4) தமிழர் வாழ்வு - பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம், (5) வெளிநாட்டு வாணிபம் - புலவர் கா.கோவிந்தன், தொகுதி 4-இல் (6) தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - புலவர் கோவிந்தன், (7) தமிழின் சிறப்பு - முத்தமிழ் காவலர் டாக்டர் கி.ஆ.பெ.விசுவநாதம், தொகுதி 5-இல் (8) தமிழக ஆட்சி - டாக்டர் மா.இராசமாணிக்கனார், (9) சங்ககாலச் சான்றோர்கள் - பேராசிரியர் டாக்டர் ந.சஞ்சீவி, (10) சங்ககாலத் தமிழ் மக்கள் - பேராசிரியர் க.வெள்ளைவாரணனார், (11) தமிழகக் குறுநில வேந்தர்கள் - மகாவித்வான் ரா.ராகவய்யங்கார், தொகுதி 6-இல் (12) தமிழகம் : சங்ககால வரலாறு; கல்வெட்டுகளில் அரசியல் - சமயம் - சமுதாயம் - டாக்டர் மா.இராசமாணிக்கனார், தொகுதி 7-இல் (13) மகளிர் வளர்த்த தமிழ் - பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், (14) சங்ககால மகளிர் - பேராசிரியர் டாக்டர் சி.பாலசுப்ரமணியன், (15) பெண்பாற்புலவர்கள் - புலவர் கா.கோவிந்தன், (16) கோப்பெருந்தேவியர் - வித்வான் அ.க.நவநீதகிருட்டிணன், தொகுதி 8-இல் (17) தமிழ் வரலாறு - தமிழறிஞர் தேவநேயப்பாவாணர், தொகுதி 9-இல் (18) தமிழ் மொழி வரலாறு - பேராசிரியர் டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், (19) தமிழ் இலக்கிய வரலாறு - பேராசிரியர் டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், தொகுதி 10-இல் (20) தமிழர் பண்பாடும் தத்துவமும் - பேராசிரியர் டாக்டர் நா.வானமாமலை, (21) பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும் - 'தீபம்' நா.பார்த்தசாரதி என தமிழர் நாகரிகத்தையும், தமிழ் மொழி வரலாற்றையும் தேடித்தரும் மொத்தம் 21 நூல்களை 10 தொகுதிகளில் கோவையாக்கி தந்துள்ளார் இதன் தொகுப்பாசிரியரும் சென்னை தமிழ் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறையின் பணி நிறைவு பெற்ற பேராசிரியருமான டாக்டர் அரங்க. இராமலிங்கம் அவர்கள்.
இந்த நூல் தொகுப்பு உலகத் தமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையன்று. தமிழருக்கு இது ஒரு சுடர் விளக்கு, அதே நேரம் தமிழ் கூறும் நல்லுலகில் வசிக்கும், வாசிக்கும் மற்றவருக்கு இது ஒரு கதிர் விளக்கு.
இந்த அரிய நூல் தொகுப்பை இப்போது நழுவவிட்டால், பின் கிடைப்பது அரிதாகலாம்.
வாழ்த்துகளுடன்.