Law Books

அனைத்து மாநகராட்சிகள் சட்டம் (18 மாநகராட்சிகளுக்கு பொருந்தும் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் மற்றும் 40க்கும் அதிகமான சட்டதிட்டங்கள் அடங்கிய விரிவான நூல்) - City Municipal Corporation Act and other Rules and Regulations / A Detailed Book

53902 Views
  • Binding : Hard Bound with Closure
  • Author : Editorial Board of ATC
  • Pages : 944
  • Publisher: ATC
  • Edition: First Edition 2022
  • Language: Tamil and English
  • FREE Delivery
* Out of Stock

Delivery to

Description

1981-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டத்தின் (The Coimbatore City Municipal Corporation Act, 1981) விளைபலனாக கோயம்புத்தூர் நகராட்சி, மாநகராட்சியாக ஆனது. இதையடுத்து 1994-ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம் ஆகிய நகராட்சிகளின் நிலை உயர்த்தப்பட்டு அவையும் மாநகராட்சிகளாக உருவெடுத்தன. இதற்கென 1994-ஆம் ஆண்டில் மூன்று தனித்தனி சட்டங்கள் இயற்றப்பட்டன. அவை,

(1) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சட்டம், 1994

(2) திருநெல்வேலி மாநகராட்சி சட்டம், 1994

(3) சேலம் நகராட்சி சட்டம், 1994.

இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், மேற்கண்ட மூன்று சட்டங்களும் 'மேற்கோள் சுட்டும் சட்டங்கள்' (Referential Legislation) ஆகும். அதாவது ஒரு புதிய சட்டம் தனது வகைமுறைகளுக்கு ஏற்கனவே செயல்திறத்தில் உள்ள சட்டத்தின் வகைமுறைகளை மேற்கோளாக சுட்டிக்காட்டி அவற்றை தனதாக ஏற்றுக்கொண்டால் அச்சட்டம் மேற்கோள் சுட்டும் சட்டம் எனப்படுகின்றது. அந்த வகையில், 1994-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மேற்கண்ட மூன்று சட்டங்களும், தங்கள் தனிப்பட்ட சட்ட வகைமுறைகளுக்கு 1981-ஆம் ஆண்டின் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டத்தின் வகைமுறைகளை மேற்கோளாக சுட்டிக்காட்டின. சுருக்கக்கூறின், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாநகராட்சிகள் தங்கள் 1994-ஆம் ஆண்டின் சட்ட நடைமுறைகளுக்கு 1981-ஆம் ஆண்டின் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டத்தின் வகைமுறைகளை 'அப்படியே' (mutatis mutantis) பின்பற்றின.

இதே நிலைப்பாடு, இதற்கு பிறகு மாநகராட்சியாக நிலையுயர்த்தப்பட்ட தஞ்சாவூர், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், திண்டுக்கல், ஆவடி, ஓசூர், நாகர்கோயில், கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி, கரூர், தாம்பரம், கும்பகோணம் ஆகிய நகராட்சிகளுக்கும் பொருந்தும் வண்ணம் ஆக்கப்பட்டது. எனவே மேற்சொன்ன 1981-ஆம் ஆண்டின் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டமே இன்று தமிழகத்தில், சென்னை மற்றும் மதுரை நீங்கலாக  இருக்கும் 18 மாநகராட்சிகளுக்கும் பொருந்தும் தோற்றுவாய் சட்டம் (Parent Act) என்று சொன்னால் அது மிகையன்று. அந்த 18 மாநகராட்சிகளுக்குமென தனித்தனியாக சட்டம் இயற்றப்பட்டிருப்பினும், விரிவான சட்ட திட்டங்களுக்கு அவை யாவும் ஒருமித்த குரலில் 1981-ஆம் ஆண்டின் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டத்தையே பார்க்கச் சொல்கின்றன.

944 பக்கங்கள் கொண்ட இந்த பெரும் நூல் மேற்கண்ட 1981-ஆம் ஆண்டு சட்டத்தையும் அதன் கீழான மற்றும் அதற்குத் தொடர்புடைய பல்வேறு சட்டவிதிகளையும் விளக்குகின்றது. சென்னை, மதுரை நீங்கலாக உள்ள அனைத்து மாநகர மாநகராட்சிகளின் நடைமுறைகளையும், மாநகர நிர்வாகத்தையும் தெரிந்து கொள்ளவும், உரிய அதிகாரஅமைப்புகளின் முன் சட்டப்பிரிவுகளை சுட்டிக்காட்டி வாதிடவும் நாம் கைக்கொள்ள வேண்டிய சட்டம் 1981-ஆம் ஆண்டின் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் (The Coimbatore City Municipal Corporation Act, 1981) ஆகும். எனினும் அடிப்படையான சில வகைமுறைகளை ஒரே மாதிரியாகக் கொண்டிருக்கும் மேற்சொன்ன 18 மாநகராட்சி சட்டங்களும் இந்த நூலில் ஒரு பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நூலின் பொருளடக்கம் பின்வருமாறு :-

1.     கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம், 1981
2.     கோயம்புத்தூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை 2016, துணை விதிகள்
3.     தமிழ்நாடு நகராட்சிகள் தொலைக்காட்சி கேபிள்கள் அமைப்பு முறைப்படுத்துதல் விதிகள் 2000
4.     தமிழ்நாடு எல்லை வரையறை ஆணைய சட்டம் 2017
5.     தமிழ்நாடு தனியிருப்பிடச் சொத்துரிமைச் சட்டம் 1994
6.     Tamil Nadu Apartment Ownership Rules 1997
7.     நம் குடியிருப்பு, நம் பொறுப்பு - வழிகாட்டு நெறிகள்
8.     தமிழ்நாடு மின்தூக்கிகள் & மின்னியங்கேணிகள் சட்டம், 1997
9.     தமிழ்நாடு மின்தூக்கிகள் & மின்னியங்கேணிகள் விதிகள், 1997
10.   2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு (நகராட்சிப்பகுதிகளில்) சொத்துரிமை மாற்றங்களின் மீதான தீர்வை சட்டம்
11.   Tamil Nadu Town Panchayats, Third Grade Municipalities, Municipalities and Municipal Corporations (Duty on Transfers of Property) Rules, 2011
12.   மனைகள் & மனைப்பிரிவுகள் புதிய கட்டட விதிகள் 2019 மற்றும் அரசாணைகள்
13.   ஒப்புதல் அளிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தல் விதிகள் 2017
14.   நிலப்பயன்பாட்டை வேளாண்மை நோக்கத்திலிருந்து வேளாண்மை அல்லாத நோக்கத்திற்கு மாற்றுவதற்கான விதிகள்
15.   Buildings - Check List G.O.'s
16.   தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905
17.   தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (மின்னணு அச்சு விளம்பரப் பட்டிகை மற்றும் அட்டைகள் நிறுவிட அனுமதி) விதிகள் 2011
18.   தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரிச்சட்டம், 2017
19.   தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவர் சட்டம், 2014
20.   தமிழ்நாடு உள்ளாட்சி நிதித்தணிக்கைச் சட்டம் 2014
21.   தமிழ்நாடு பொது வளாகங்கள் (அதிகாரமளிக்கப்படாத கையுடமையாளர்களை வெளியேற்றல்) சட்டம், 1975
22.   தமிழ்நாடு பட்டாப் பதிவுப் புத்தகச் சட்டம் 1983
23.   தமிழ்நாடு தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டம்
24.   The Coimbatore City Municipal Corporation Water Supply By-Laws, 1990
25.   பாதாள சாக்கடை துணை விதிகள், மதுரை
26.   தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகள் ஒளிவின்மைச் சட்டம், 1998
27.   தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் விதிகள் 2000
28.   ஊழல் தடுப்புச் சட்டம், 1988
29.   திருச்சி மாநகராட்சி சட்டம், 1994
30.   திருநெல்வேலி மாநகராட்சி சட்டம், 1994
31.   திருநெல்வேலி மாநகராட்சி புதை வடிகால் துணை விதிகள்
32.   சேலம் மாநகராட்சி சட்டம், 1994
33.   ஈரோடு மாநகராட்சி சட்டம் 2008
34.   திருப்பூர் மாநகராட்சி சட்டம் 2008
35.   Implementation of Namakku Naame Thittam (Urban) - Guidelines
36.   தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் 2018
37.   தூத்துக்குடி மாநகராட்சி வடிகால் திட்ட துணை விதிகள்
38.   கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி, கரூர், தாம்பரம் மற்றும் கும்பகோணம் மாநகராட்சிகள் சட்டம்
39.   தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி சட்டம்
40.   ஆவடி, ஓசூர் மற்றும் நாகர்கோயில் மாநகராட்சி சட்டம்
41.   Tamil Nadu Urban Employment Scheme
42.   வருவாய் வரி வசூலிப்பு சட்டம், 1864
43.   சொத்து வரி சீராய்வு - 2022-2023 முதலாம் அரையாண்டு
44.   Tamil Nadu State Property Tax Board Act, 2013

அரசு மற்றும் தனியார் வழக்குரைஞர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அதன் நிருவாகத்துடன் தொடர்புடைய மற்றவர்கள், பொது மக்கள் என அனைவரும் அவசியம் வாங்கி வாசிக்க வேண்டிய நூல் இது. மாநகராட்சி சட்ட திட்டங்கள் பற்றிய மிக விரிவான தொகுப்பு நூலாக கெட்டி அட்டை ஏட்டுக்கட்டுமானத்தில் வெளிவந்திருக்கும் இதனை இப்போது நழுவவிட்டால் பின் கிடைப்பது அரிது.

நூல் மதிப்பாய்வு : பி.ஆர்.ஜெயராஜன், வழக்குரைஞர் மற்றும் சட்டத்தமிழாய்வு அறிஞர்.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books