Law Books

பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா 2023 - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 replacing the earlier Code of Criminal Procedure 1973) as Bilingual Edition in Tamil and English with Corresponding Provisions and Comparative Table

15745 Views
₹ 1200
  • Binding : Paperback
  • Author : Editorial Board of ATC
  • Pages : 720
  • Publisher: Account Test Centre
  • Edition: (ATC) ; 1st Edition 2024
  • Language: Tamil and English
  • In stock, Only 46 Left

Delivery to

Description

இந்த நூலில் 01-07-2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ள பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா 2023 (Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023) சட்டத்தின் வகைமுறைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன.

புதிதாக இயற்றப்பட்டுள்ள இச்சட்டத்தின் வகைமுறைகள் ஒவ்வொன்றின் கீழும் இதற்கு முந்தைய சட்டமான "குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு" நேரிணையான சட்டப்பிரிவின் எண் (Old Corresponding Section) கொடுக்கப்பட்டிருப்பது, இந்நூலை வாசிப்பவருக்கு நல்லதொரு புரிதலை தருகின்றது என்று சொன்னால் து மிகையன்று.

அதேபோல் பழைய மற்றும் இந்தப்புதிய சட்டப்பிரிவுகளின் ஒப்பீட்டு அட்டவணையும் இந்நூலில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது.

மேலும் குற்றங்களின் வகைப்பாடு என்ற தலைப்பின் கீழ் சட்டப்பிரிவு, குற்றம், அதற்கான தண்டனை, அக்குற்றம் கைது செய்தற்குரிய அல்லது கைது செய்தற்குரியதல்லாத குற்றமா, அதேபோன்று அது பிணையில் விடக்கூடிய அல்லது பிணையில் விடக்கூடாத குற்றமா?, அக்குற்றத்திற்கான விசாரணையை மேற்கொள்ளும் நீதிமன்றம் எது? என்ற விவரங்களின் அட்டவணையை புதிய சட்டத்தில் உள்ள அதே வடிவில் ஆங்கிலம் மற்றும் தமிழில் தந்திருப்பது சிறப்பாக உள்ளது.

இச்சட்டத்தில் இடம்பெறும் 55 படிவங்கள் இந்நூல் இறுதியில் தரப்பட்டுள்ளன.

மொத்தம் 720 பக்கங்கள் கொண்ட இந்நூல் வழக்குரைஞர்கள், சட்ட மாணவர்கள், நீதிபதிகள், காவல்துறையினர், பொதுமக்கள் என அனைவருக்கும் பயன்தரக்கூடியதாகும்.

பொருளடக்கம்:-

  • இயல் - 1 : முதனிலை
  • இயல் - 2 : குற்ற வழக்கு நீதிமன்றங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றின் அமைப்பு
  • இயல் - 3 : நீதிமன்றங்களின் அதிகாரம்
  • இயல் - 4 : மேல்நிலைக் காவல் அலுவலர்களின் அதிகாரங்கள் மற்றும் நடுவர்களுக்கும் காவல்துறையினருக்கும் உதவுதல்
  • இயல் - 5 : கைது செய்தல்
  • இயல் - 6 : முன்னிலையாவதைக் கட்டாயப்படுத்தும் நீதிமுறைக் கட்டளைகள்

அ. அழைப்பாணைகள்

ஆ. பிடிகட்டளை

இ. பகிரங்க அறிவிப்பும் பற்றுகையும் (ஜப்தியும்)

  • இயல் - 7 : பொருட்களை ஒப்படைத்தலைக் கட்டாயப்படுத்தும் நீதிமுறைக் கட்டளைகள்

அ. அழைப்பாணையை ஒப்படைத்தல்
ஆ. சோதனைக் கட்டளைகள்
இ. சோதனைகள் சம்பந்தமான பொது விதிகள்
ஈ. பலதிறப்பட்டவை

  • இயல் - 8 : சில காரியங்கள், ஜப்திக்கான நடைமுறை, உடைமை பறிமுதல் ஆகியவற்றில் உதவுகைக்கான ஒத்திசைவு உடன்படிக்கை
  • இயல் - 9 : அமைதி காப்பதற்கும் நன்னடத்தைக்குமான பிணையம் ஜாமீன்
  • இயல் - 10 : மனைவிகள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சீவனாம்சத்திற்கான கட்டளை
  • இயல் - 11 : பொது ஒழுங்கையும் அமைதியையும் நிலை நாட்டுதல்

அ. சட்டவிரோதமான கும்பல்கள்
ஆ. பொதுத் தொல்லைகள்
இ. தொல்லை அல்லது எதிர்பார்க்கப்படுகிற அபாயம் ஆகிய அவசர நிலைகள்
ஈ. அசையாப் பொருள் பற்றிய தகராறுகள்

  • இயல் - 12 : காவல் துறையினரின் தடுப்பு நடவடிக்கை
  • இயல் - 13 : காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தலும், புலனாய்வு செய்வதற்கு அவர்களுக்குள்ள அதிகாரங்களும்
  • இயல் - 14 : பரிசீலனைகளிலும், விசாரணைகளிலும் குற்ற வழக்கு நீதிமன்றகளுக்குள்ள அதிகார வரம்பு
  • இயல் - 15 : நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன் தேவைப்படும் நிபந்தனைகள்
  • இயல் - 16 : நடுவர்களிடம் முறையீடுகள் செய்துகொள்ளுதல்
  • இயல் - 17 : நடுவர்கள் முன் நடவடிக்கைகளைத் தொடங்குதல்
  • இயல் - 18 : குற்றச்சாட்டு

அ. குற்றச்சாட்டுகளின் படிவம்
ஆ. குற்றச்சாட்டுகளை இணைத்தல்

  • இயல் - 19 : அமர்வு நீதிமன்றத்தின் முன் விசாரணை
  • இயல் - 20 : பிடிகட்டளை வழக்குகளை நடுவர்கள் விசாரணை செய்தல்

அ. காவலறிக்கையின் பேரில் தொடரப்பட்ட வழக்குகள்
ஆ. காவலறிக்கையின் பேரில்லாமல் வேறுவிதமாகத் தனிப்பட்ட முறையில் தொடுக்கப்பட்ட வழக்குகள்
இ. விசாரணை முடிவுறுதல்

  • இயல் - 21 : அழைப்பாணை வழக்குகளை நடுவர்கள் விசாரணை செய்தல்
  • இயல் - 22 : சுருக்க விசாரணைகள்
  • இயல் - 23 : பேரம் பேசுதல்
  • இயல் - 24 : சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்களை அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களை ஒப்படைத்தல்
  • இயல் - 25 : பரிசீலனைகளிலும், விசாரணைகளிலும் சாட்சியம்

அ. சாட்சியத்தை எடுப்பதற்கும் பதிவு செய்வதற்குமான முறை
ஆ. சாட்சிகளை விசாரிப்பதற்கான ஆணைகள்

  • இயல் - 26 : விசாரணைகள் பற்றிய பொது வகைமுறைகள்
  • இயல் - 27 : பைத்தியமாக இருக்கும் எதிரிகள் பற்றிய வகைமுறைகள்
  • இயல் - 28 : நீதி நிர்வாகத்தைப் பாதிக்கும் குற்றங்கள் பற்றிய வகைமுறைகள்
  • இயல் - 29 : தீர்ப்பு
  • இயல் - 30 : மரணதண்டனைகளை உறுதிப்படுத்துவதற்காகப் பணிந்தனுப்புதல்
  • இயல் - 31 : மேல்முறையீடுகள்
  • இயல் - 32 : மேலாய்வும் சீராய்வும்
  • இயல் - 33 : குற்றவழக்குகளை மாற்றுதல்
  • இயல் - 34 : தண்டனைகளை நிறைவேற்றுதல், தற்காலிகமாக நிறுத்திவைத்தல், குறைத்தல், மாற்றுதல்

அ. மரணதண்டனைகள்
ஆ. சிறைத்தண்டனை
இ. அபராதம் வசூலித்தல்
ஈ. நிறைவேற்றுதல் பற்றிய பொதுவகையங்கள்
உ. தண்டனைகளை நிறுத்தி வைத்தல், தள்ளுபடி செய்தல் மாற்றுதல்

  • இயல் - 35 : பிணைகள் (ஜாமீன்) மற்றும் பிணைமுறிய பத்திரங்கள் பற்றிய வகைமுறைகள்
  • இயல் - 36 : சொத்து முடிவுச் செய்யப்படுதல்
  • இயல் - 37 : முறைகேடான நடவடிக்கைகள்
  • இயல் - 38 : சில குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான காலவரம்பு
  • இயல் - 39 : பல்வகைப்பட்டவை
  • அட்டவணைகள்
  • படிவங்கள்
Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books