Competitive Exam Books

2023 TNUSRB SI Exam Guide in TAMIL for OPEN QUOTA | காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு கையேடு (பொது) - தமிழ் மொழி தகுதி தேர்வு, பொது அறிவு, உளவியல் பாடங்கள், 8240 Q & A, முந்திய 2022, 2019, 2018, 2015, 2010 Question Paper and Answers | புதிய கையேடு

52297 Views
₹ 960
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishing House
  • Pages : 1002
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: 1st Edition 2023
  • Language: Tamil
  • FREE Delivery
  • In stock, Only 4 Left

Delivery to

Description

TNUSRB 2023 | காலிப்பணியிடங்கள் 621 + 129 | நேரடித்தேர்வு | பொது (OPEN Quota) விண்ணப்பதாரர்களுக்கு |

இது காவல் சார்பு ஆய்வாளர்கள் [தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை (ஆண், பெண் மற்றும் திருநங்கை)] பதவிகளுக்காக பொது விண்ணப்பதாரர்களுக்கென தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2023-இல் நடத்தும் நேரடித் தேர்வுக்கான சிறப்பு கையேடு ஆகும்.

இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இக்கையேட்டின் பகுதி I-ல் தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான பாடங்கள் தரப்பட்டுள்ளன. இத்தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயமானதாகும். கொள்குறிவகை வினாத்தாளைக் இத்தேர்வானது 100 மதிப்பெண்களுக்கான 100 வினாக்களைக் கொண்டது. இத்தேர்வுக்கான காலா அளவு 100 நிமிடங்கள் ஆகும் (அதாவது 1 மணி 40 நிமிடங்கள்). தமிழ் மொழி தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் (40%) பெற்று தகுதி பெறும் விண்ணப்பதாரர்களின் முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைத்தாள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும். இந்த தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தாற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இத்தேர்வு பொது  மற்றும் 20 விழுக்காடு துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பொதுவான தேர்வு ஆகும். பொது மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீட்டுக்கும் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி தகுதித் தேர்வினை ஒருமுறை எழுதினால் போதுமானது. இந்த முதல் பகுதியில் (1) இலக்கணம் (2) இலக்கியம் (3) தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் என்ற தலைப்புகளில் பாடங்கள், கொள்குறி வகை வினாக்கள் மற்றும் முந்தைய தேர்வு வினாத்தாள்கள் (2010, 2015, 2018, 2019, 2022) ஆகியன தரப்பட்டுள்ளன.

அடுத்து  பகுதி II-ல் முதன்மை எழுத்து தேர்வுக்கான பாடங்கள் பொது அறிவு மற்றும் உளவியல் தேர்வு என்ற இரண்டு தலைப்புகளில் இக்கையேட்டில் தரப்பட்டுள்ளன.

'பொது அறிவு' எனும் பாடத்தலைப்பில்

    பொது அறிவியல்,
    வரலாறு,
    புவியியல்,
    பொருளாதாரம்,
    இந்திய அரசியல்,
    நடப்பு நிகழ்வுகள்

ஆகியன தரப்பட்டுள்ளன.

'உளவியல் தேர்வு' எனும் பாடத்தலைப்பில்

பகுப்பாய்வு,
எண் கணிதம்,
தகவல் தொடர்பு திறன்,
தகவலை கையாளும் திறன்,

ஒத்த தன்மை
ஒரே மாதிரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல்
உவமை பொருந்திய ஜோடிகளைத் தேர்ந்தெடுத்தல்
உவமை பொருந்திய எண்கள்
தொடர் வரிசை
எண் தொடர்கள்
வரிசைப்படுத்துதல்
எழுத்துக்கள் மூலம் முறைப்படுத்துதல்
எண்கள் மூலம் இரகசிய மொழி
எழுத்துகள் கலந்த இரகசிய மொழி
எண்கள் கலந்த இரகசிய மொழி
உறவுகள் பற்றிய கணக்குகள்
விடுபட்டதை சேர்த்தல்
அடையாளங்களை மாற்றி கணக்குகள் செய்யும் முறை
திசைகள் பற்றிய கணக்குகள்

உளத்திறன் தேர்வு

ஆகியன விவரிக்கப்பட்டுள்ளன. இதில் பாடங்கள், கொள்குறிவகை வினாக்கள், மாதிரி வினாத்தாள் விடைகளுடன், பயிற்சி வினாத்தாள்கள் தரப்பட்டுள்ளன.

எனவே இந்த கையேட்டை தமிழ் மொழி தகுதி (10 அலகுகள்), பொது அறிவு (6 பிரிவுகள்), உளவியல் (5 பிரிவுகள்) ஆகிய பாடங்கள் அடங்கிய "முப்பெரும் பாட வழிகாட்டி" (3 in 1 Guide) என்று கூறினாலும் தகும்.

வெறும் பாடங்கள் மட்டுமா...? இல்லை இல்லை... அம்முப்பெரும் பாடங்களிலிருந்து மொத்தம்  8240 கொள்குறி வினா விடைகள் தரப்பட்டுள்ளன. அத்துடன் மேலே சொன்னதைப்போல பயிற்சி செய்து பழகுவதற்கு மாதிரி வினாத்தாள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக 2022, 2019, 2018, 2010, 2015 ஆண்டு தேர்வுக்கான  வினாத்தாள் விடைகளும் தரப்பட்டுள்ளன.

இவ்வாறு காவல் சார்பு ஆய்வாளர் தேர்வின் வெற்றிக்கு வழிகாட்டும் எல்லா அம்சங்களையும் இக்கையேடு கொண்டுள்ளது என்று சொன்னால் அதை மறுக்கவியலாது.

தேர்வெழுதுவோர் வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டுமே தனது தாரக மந்திரமாக கொண்டு, பல்வேறு அரசுப் பதவிகளுக்கான கையேடுகளை வடிவமைத்து வெளியிட்டு வரும் சக்தி பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் அயராத உழைப்பின் விளைபலன்தான் இந்த சிறப்புக் கையேடு என்று சொன்னால் அதில் மிகை இல்லை.

தேர்வில் வெற்றி பெற எங்கள் இனிய வாழ்த்துகள்.


Sakthi, SI Exam, Guide, General Quota, Transgender

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books