"தமிழ்நாடு அரசு ஊழியர் துணைவன்" என்ற இந்த நூல் அரசு ஊழியர்களுக்கு கிடைத்துள்ள ஓர் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
இதில் (1) புதிய ஊதியக் குழு ஊதிய நிர்ணய விதிகள் மற்றும் ஆணைகள் (New Pay Commission 2017 - Rules and Orders) (2) தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2017 (The Tamil Nadu Revised Pay Rules 2017) (3) தமிழ்நாடு விடுப்பு விதிகள், (4) தமிழ்நாடு பயணப்படி விதிகள் 1993 (5) தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் (6) பொது வருங்கால வாய்ப்பு நிதி, (7) குடும்ப நல நிதித்திட்டம், (8) பணியேற்பிடைக் காலம், (9) மருத்துவப்படி (10) ஊதிய உயர்வு (அடிப்படை விதிகள்), (11) கருவூலகம் - பட்டிகளில் தவறுகள் மற்றும் திருத்தங்கள், (12) பதிவு உயர்வு - தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல், (13) தமிழ்நாடு தகவல் ஆணையம் - விசாரணை முடிவுகள் (14) மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு களைதல், (15) தனி ஊதியம் 5 விழுக்காடு (16) ஊதியம் அறுதியிடல் (அடிப்படை விதிகள்), (17) பணி நிபந்தனைகள் சட்டம் 2016, (18) பணிப் பதிவேடு பராமரிப்பு, (19) தகவல் ஆணையம் விசாரணை முடிவுகள் ஆகியன முதல் பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளன.
பகுதி II-இல் ஒழுங்கு நடவடிக்கை விதிகள் தரப்பட்டுள்ளன. இதில் (1) நடத்தை விதிகள், (2) தமிழ்நாடு குடிமைப்பணி ஒழுங்கு & மேல்முறையீடு விதிகள், (3) குற்ற அறிக்கை தொடுத்தல் (4) ஒழுங்கு நடவடிக்கை விசாரணை எவ்வாறு நடத்தப்படுகிறது ? (5) விசாரணை அதிகாரிகளே ! உங்கள் கவனம் !! (6) விசாரணை இறுதி முடிவு (7) மேல்முறையீடு, மறு ஆய்வு மற்றும் மனுக்கள், (8) துறை ஒழுங்கு நடவடிக்கை எதிர் குற்றவியல் வழக்கு நடவடிக்கை (9) இந்திய தண்டனை சட்டமும் அரசு ஊழியரும் (10) பணியறவு, பணி அகற்றுகை & கட்டாய ஓய்வு, (11) பணி இடை நீக்கம், (12) பணி ஓய்வு, (13) வேலை நிறுத்தமும் அரசு ஊழியரும் ஆகிய தலைப்புகளின் கீழ் பல்வேறு சட்ட திட்டங்கள், விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் (1) Preparation of Panel Related G.O.s (2) துறை விசாரணைகள் (சாட்சிகளை மற்றும் ஆவணங்கள் முன்னிலை) சட்டம் 1972, (3) தமிழ்நாடு தகவல் ஆணையம் விசாரணை முடிவுகளும் தரப்பட்டுள்ளன.
நிறைவாக, இந்த தொகுப்பு நூல் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வண்ணம் வெளிவந்துள்ளது என்று சொன்னால் அதில் மிகை ஏதுமில்லை.
வாழ்த்துகளுடன்.
ATC