Entrance Exam Guide

AIBE (All India Bar Examination) எனப்படும் அனைத்திந்திய வழக்கறிஞர் குழாம் தேர்வுக் கையேடு - முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் விடைகளுடன் மற்றும் 23 சட்டங்களில் இருந்து கொள்குறி வகை வினா விடைகள் / தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

52911 Views
₹ 1600
  • Binding : Paperback
  • Author : M.Gnana Gurunathan, B.Thanga Aravind and T.Pandi Rani, Advocates.
  • Pages : 1152
  • Publisher: ATC
  • Edition: Special Edition 2024
  • Language: Tamil and English
  • FREE Delivery
  • In stock, Only 18 Left

Delivery to

Description

AIBE (All India Bar Examination) எனப்படும் அனைத்திந்திய வழக்கறிஞர் குழாம் தேர்வுக்கு உதவும் நூல் இது.

இத்தேர்வுக்கான  பாடத்திட்டத்தின்படி பெரும் பிரிவுகளாக வகை செய்யப்பட்ட மொத்தம் 19 சட்டங்களில் இருந்து 100 கொள்குறிவகை வினாக்கள் தேர்வில் கேட்கப்படுகின்றன. சரியான விடைக்கு தலா 1 மதிப்பெண் வீதம் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடைபெறுகின்றது. தவறான விடைக்கு மதிப்பெண் கழிக்கும் முறை (negative marking) இதில் கிடையாது. இத்தேர்வில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் SC / ST பிரிவினர் 35 சதவீத மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். 3 மணி நேரமும் 30 நிமிடங்களும் நடக்கும் இத்தேர்வில் வெற்றி பெற்றால்தான் வழக்குரைஞராக தொடர்ந்து தொழிலாற்ற முடியும்.

அந்த வகையில் தேர்வுக்கு உதவும் வண்ணம் வெளிவந்திருக்கும் இந்த நூல் பின்வரும் முப்பெரும் அம்சங்களைக் கொண்டது. அதாவது

(1) டிசம்பர் 2017 முதல் அக்டோபர் 2021 வரை 13 முறை நடந்த AIBE தேர்வுக்கான வினாத்தாள்கள் விடைகளுடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்பட்டுள்ளன. எனவே முந்தைய வினாத்தாள்களை புரட்டிப்பார்த்து திரும்பத்திரும்ப கேட்கப்படும் வினாக்களை மற்றும் புதிய வினாக்களை விடைகளுடன் மாணவர்கள் அறிந்து தங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும்.

(2) AIBE பாடத்திட்டத்தின்படி பின்வரும் சட்டங்களில் இருந்து மாதிரி கொள்குறிவகை வினாக்களும் விடைகளும் தரப்பட்டுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வினா விடைகள், AIBE தேர்வில் எத்தகு வினாக்கள் கேட்கப்பட வாய்ப்புண்டு, அவற்றுக்கு எது சரியான விடை என்பதை ஒரு மாணவர் அறிந்து தெளிந்து கொள்ள வழி செய்கின்றது. அந்த சட்டங்கள் வருமாறு.

(1)   Jurisprudence
(2)   Administrative Law
(3)   Advocates Law
(4)   Environmental Law
(5)   Law of Torts
(6)   Company Law
(7)   Land Acquisition Act, 2013
(8)   Muslim Law
(9)   Hindu Laws
(10) The Specific Relief Act
(11) Transfer of Property Act, 1963
(12) Indian Contract Act, 1882
(13) The Negotiable Instruments Act 1872
(14) Food Safety & Standards Act 2006
(15) The Information Technology Act, 2000
(16) Protection of Children from Sexual Offences Act, 2012
(17) Prevention of Atrocities Act
(18) Narcotic Drugs and Psychotropic Substances Act
(19) The Prohibition of Child Marriage Act, 2006
(20) The Arbitration and Conciliation Act, 1996
(21) Forest Conservation Act
(22) Motor Vehicles Act
(23) Labour Laws
(24) Taxation Laws
(25) Constitution of India

இந்த நூலின் மூன்றாவது பெரும் அம்சமாக விளங்குவது யாதெனில், குறித்தவகை பரிகாரச் சட்டம், ஒப்பந்தச் சட்டம், மாற்று முறையாவணங்கள் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களின் தமிழாக்கமும் தரப்பட்டுள்ளன.

இந்த நூல் AIBE தேர்வுக்கு மட்டுமல்லாது உரிமையியல் நீதிபதி (Civil Judge Exam) தேர்வுக்கும் பயன் தரும்.

Ratings and Reviews Write a Review
5
1 Reviews
5 ★

Nice information ????????

Super Book are asking
Maha@1975, 2023-11-06 20:10:31
View All Reviews
Related Books