Law Books

இனாம் நிலச்சட்டங்கள் மற்றும் இதர இனாம் சட்டங்கள், விதிகள் (விளக்கவுரை மற்றும் தீர்ப்புகளுடன்) (INAM LAND LAWS - Tamil Nadu Estate Abolition Act, 26/1948, Tamil Nadu Minor Inam Abolition Act, 30/1963, Other Inam Acts & Rules with Notes and Case Laws)

53260 Views
₹ 970
  • Binding : Hardcover
  • Author : K.Sakthivel, Advocate, High Court, Madras (Former Joint Commissioner, TNHR & CE Department)
  • Pages : 694
  • Publisher: C.Sitaraman and Co. Pvt. Ltd.
  • Language: Tamil and English
  • In stock, Only 10 Left

Delivery to

Description

இனாம் நிலச் சட்டங்களில் மிகவும் முக்கியமான 'தமிழ்நாடு எஸ்டேட் இனாம் ஒழிப்புச் சட்டம் 26/1948' (Tamil Nadu Estate Abolition Act, 26/1948) மற்றும் 'தமிழ்நாடு மைனர் இனாம் ஒழிப்புச் சட்டம் 30/1963' (Tamil Nadu Minor Inam Abolition Act, 30/1948) ஆகிய இரு சட்டங்கள் குறித்தான முக்கிய பிரிவுகள், விளக்கங்கள், நீதிமன்ற தீர்ப்புகள், இதர இனாம் நிலச் சட்டங்கள் குறித்தான சிறு குறிப்புகள், இனாம் நிலங்களின் வரலாறு, மூல ஆவணம் (Title Deed), இனாம் தூய பதிவேடு (Inam Fair Register) போன்ற பழமையான ஆவணங்களின் சிறப்புகள், வருவாய்த் துறையின் நிலம் தொடர்பான ஆவணங்களின் சிறப்புத் தன்மைகள் மற்றும் அவற்றின் நகல்களுடன் இந்த "இனாம் நிலச் சட்டங்கள்"  என்ற நூல் வெளிவந்துள்ளது.

மேலும் மைனர் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் முக்கியமான பிரிவுகளின் அடிப்படையில் பகரப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள், சட்டப்பிரிவு 8-இன் உட்பிரிவுகளில் எத்தகைய காரணிகளின் பேரில் இராயத்துவாரி பட்டா உத்தரவுகள் வழங்கிட வேண்டும் அல்லது வழங்கி இருக்க வேண்டும் என்பது குறித்த கருத்துகள், மைனர் இனாம் வழக்குகளை, திருக்கோவில் மற்றும் இடருற்றவர் தரப்பில் நீதிமன்றங்களில் எதிர்கொள்வதற்கான சட்டக்கருத்துகள், திருக்கோவிலுக்கு வழங்கப்பட்ட இனாம் நிலத்தை சில காரணிகளின் அடிப்படையில் பிரிவு 9-இன்படி அரசே தன்வசமாக்குதல் தொடர்பான வழக்கு, எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் மற்றும் மைனர் இனாம் ஒழிப்பு சட்ட விதிகள், இனாம் ஆணையத்தால் 1865-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மாவட்டவாரியான, இனம்வாரியான இராயத்துவாரி பட்டா விபரங்கள் ஆகியன இந்த நூலின் தற்போதைய புதிய பதிப்பில்  விரிவாகத் தரப்பட்டுள்ளன.

இனாம் சட்டங்கள் தொடர்பான பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிகள் ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டிருப்பது இந்நூலை மேலும் பொலிவுபடுத்துகின்றது.

இந்நூலின் ஆசிரியர் திரு கே.சக்திவேல் இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books