காவல்துறையினருக்கு உள்ள அதிகாரங்களையும், கடமைகளையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் காவல் நிலையாணைகள் விரிவாக குறிப்பிட்டாலும், ஒரு தனிப்பட்ட பொருட்பாடு குறித்து இயற்றப்படும் சிறப்பு சட்டங்கள் பலவும், அந்தந்த சட்டத்திற்குள்ளாகவே காவல்துறைனருக்கு சில அதிகாரங்களையும் கடமைகளையும் வகுத்து கொடுத்துள்ளன. எடுத்துக்காட்டாக மின்சார சட்டம் 2003, பதிப்புரிமை சட்டம் 1957, வரதட்சணை தடைச்சட்டம் 1961 ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு மொத்தம் 145 தனிவகை சட்டங்களின் கீழ் வகுத்துரைக்கப்பட்டுள்ள காவல்துறையினரின் அதிகாரங்களையும் கடமைகளையும் இந்த நூல் தொகுத்து தருகின்றது.
காவல்துறையினருக்கு இது ஒரு இன்றியமையா வழிகாட்டி நூல் என்றால் அது மிகையன்று.
ATC, Police