Law Books

அறங்காவலரின் அதிகாரங்களும் கடமைகளும் (Powers and Duties of Trustee) - Useful book for Trustee appointed under TNHR & CE Act

52760 Views
₹ 270
  • Binding : Paperback
  • Author : K.Sakthivel, Advocate, High Court, Madras (Former Joint Commissioner, TNHR & CE Department)
  • Pages : 254
  • Publisher: C.Sitaraman and Co. Pvt. Ltd.
  • Language: Tamil
  • In stock, Only 8 Left

Delivery to

Description

தமிழ்நாட்டில் சுமார் 38491 அற நிலையங்கள், இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ளன. இவற்றில் சுமார் 4000 திருக்கோவில்கள் தற்சார்புடன் இயங்கும்  நிதி வசதி மிக்க அற நிலையங்கள் ஆகும். இதர சுமார் 34,000 கோவில்கள், நிதி வசதியற்ற சிறு கோவில்கள் ஆகும். இந்து சமய அறக்கட்டளைகள் சட்டத்தின்படி ஒவ்வொரு திருக்கோவிலும்/அறக்கட்டளையும்/தருமமும் அறங்காவலர் இன்றி இயங்கிட இயலாது. அறங்காவலர் பதவி என்பது, ஒரு பகட்டான பதவி அல்ல; அது ஒரு தனிப்பட்ட நபருக்கான பதவியுமல்ல.

திருக்கோவில்களில் உறைந்துள்ள இறைவன், இறைவியர் சட்ட வலிமை பெற்ற உரு ஆவர். (Legal entity). அதாவது அவர்கள் நிரந்தரமான தொடர்ச்சியான சட்ட நபர்களாக கருதப்படுகின்றனர். எனவே இறைவனும் இறைவியும் குடி கொண்டுள்ள அவர்களது திருக்கோவில்களையும், அவற்றின் சொத்துகளையும் சட்டக்காப்பாளர்களாக இருந்து தொடர்ந்து பாதுகாத்து பராமரிக்க நம்பகமான நபர்கள் தேவை. அந்த நம்பகர்கள்தாம் அறங்காவலர்கள். இவர்களின் நியமனம் சட்ட விதிகளின்படி செய்யப்படுகின்றது. இது ஒரு மிக முக்கியமான பதவி என்பதால், திருக்கோவில் அறங்காவலர்கள் தங்களுக்குள்ள சட்டப்பூர்வமான அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பொறுப்புகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயலாற்றிடவும், திருக்கோவில் சொத்துக்களை மீட்டிடவும், அதன் நலனை பாதுகாத்திடவும் இந்நூல் திருக்கோவில் அறங்காவலர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் இதன் ஆசிரியர் திரு கே.சக்திவேல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் 36 ஆண்டுகள் பணிபுரிந்து, உதவி ஆணையர் நிலையில் பணி நிறைவு பெற்றவர் என்பதும்,  தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நூல் திருக்கோவில் அறங்காவலர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஓர் நன்னூல் என்று சொன்னால் அது மிகையன்று.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books