தமிழில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் தொடர்பாக முழுமையான தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்த புத்தகத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கீழான துணை விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. துணை விதிகள் வகையில்
- (1) தமிழ்நாடு ஊராட்சிகள் (ஊராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்தல் மற்றும் வார்டுகள் பிரித்தல்) விதிகள் 1995,
- (2) தமிழ்நாடு ஊராட்சிகள் (இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு செய்தல்) விதிகள் 1995,
- (3) தமிழ்நாடு ஊராட்சிகள் (பன்றிகளுக்கு உரிமம் வழங்குதல்) விதிகள் 1996,
- (4) மாவட்ட ஊராட்சி கூட்டம் நடத்துதல், விவாதத்திற்கான பொருள்கள் மற்றும் கூட்ட நடவடிக்கைகள்,
- (5) மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு பயணப்படி வழங்குதல்
- (6) தமிழ்நாடு ஊராட்சி (ஊராட்சி ஒன்றியக் குழு பனி நியமனக் குழு உறுப்பினர் தேர்தல்) விதிகள் 1997,
- (7) தமிழ்நாடு ஊராட்சிகள் (மாவட்ட ஊராட்சித் தலைவரை உறுப்பினர்கள் இடைக்கேள்வி கேட்பது) விதிகள் 1999,
- (8) தமிழ்நாடு ஊராட்சிகள் (ஊராட்சி ஒன்றிய நிலைக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் தேர்தல் (நியமனக் குழுவினை தவிர) விதிகள் 1998,
- (9) தமிழ்நாடு ஊராட்சிகள் (கிராமசபை கூட்டம் கூட்டுதல், நடத்துதல் மற்றும் கூட்டத்தில் கலந்து கலந்து கொள்ள வேண்டியவர்களின் குறைவெண் வரம்பு) விதிகள் 1998,
- (10) மாவட்ட ஊராட்சியின் நிலைக் குழுக்கள் உறுப்பினர்கள் தேர்தல் விதிகள் 1998,
- (11) தமிழ்நாடு ஊராட்சிகள் (திட்டங்கள் தயாரித்தல், வேலைகளின் மதிப்பீடுகள் ஒப்பந்த முறைகள் மற்றும் நிபந்தனைகள்) விதிகள் 1998,- இப்படி மொத்தம் 89 விதிகள் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
எனவே இதனை ஊராட்சி சட்டம் தொடர்பான ஓர் முழுமையான கையேடு என்று சொன்னால் அதில் மிகை இல்லை.