தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப்பணிகளில் இடம்பெறும் "சாலை ஆய்வாளர்" பதவியின் தேர்ச்சிக்காக வெளிவந்துள்ள இப்புதிய தேர்வுக் கையேடு மேற்கண்ட தேர்வை எழுதுவோர்க்கு ஓர் வரப்பிரசாதம் என்று சொன்னால் அது மிகையன்று. காரணம், இக்கையேட்டில்தான் இரண்டு தாள்களுக்கும் உண்டான பாடத்திட்டங்கள் மற்றும் வினா விடை வகைகள் ஒருங்கே தரப்பட்டுள்ளன.
இதில் அடங்கியிருக்கும் தாள் I-ல் வரைவாளர் (சிவில்) தேர்வுக்கான முக்கிய பாடங்கள், கொள்குறி வகை வினா விடைகள், 5 மாதிரி பயிற்சி வினாத்தாள்கள் விடைகளுடன், 2022-ஆம் ஆண்டில் நடந்து முடிந்த தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன.
அடுத்து வரும் தாள் II-ஆனது அ, ஆ என்ற இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி அ-வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகளுடன், TNPSC மாதிரி வினாத்தாள் விடைகளுடன், 37 அலகுகளில் கொள்குறி வகை வினா விடைகள் தரப்பட்டுள்ளன.
பகுதி ஆ-வில் பொது அறிவு மற்றும் திறனாய்வுத் தேர்வுக்கான முக்கிய பாடங்கள், கொள்குறிவகை வினா விடைகள், முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன.
இப்பதவிக்கு 761 காலிப்பணியிடங்கள் உள்ளன.
ரூ.19500 - ரூ 71900/- என்ற சம்பள ஏற்ற முறை உள்ள இந்த சாலை ஆய்வாளர் பதவி தேர்வில் வெற்றி பெற இந்த கையேடு பெரிதும் உதவும் என்பது திண்ணம்.
வாழ்த்துக்களுடன்...