பொலிவான 6-ஆவது பதிப்பில் வெளிவரும் இந்த "மனித உரிமைகளும் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டமும்" என்ற புத்தகம், தமிழக அரசின் பரிசை வென்றதாகும். 2006-ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின்படி அமைந்த இந்நூல், இரு பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டது.
முதற்பகுதியில் "மனித உரிமைகள்" என்ற தலைப்பின் கீழ் (1) மனித உரிமைகள் - ஓர் அறிமுகம், (2) மனித உரிமைகள் - வரலாறும் வளர்ச்சியும், (3) மனித உரிமைகளின் தன்மை, பொருள் மற்றும் கருத்து, (4) அய்க்கிய நாடுகள் சாசனமும் மனித உரிமைகளும், (5) மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான முறைகள், அமைப்புகள் மற்றும் ஆவணங்கள் (அ) அனைத்துலகரீதியான முறை அல்லது அய்க்கிய நாடுகள் முறை, (ஆ) இந்திய முறை ஆகிய அத்தியாயங்கள் வாயிலாக பல்வேறு மனித உரிமைக் கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன.
பகுதி 2-இல் "மனித உரிமைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1993" என்ற தலைப்பின் கீழ், மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் சட்ட வகைமுறைகள் தரப்பட்டுள்ளன. இந்நூலின் பிற்சேர்க்கையாக (1) தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் செய்வதற்கான மாதிரி படிவம், (2) தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் எவ்வாறு புகார் செய்வது என்பதற்கான வழிகாட்டு நெறிகள், (3) தகவல் உரிமை சட்டப்படி மனித உரிமைகள் ஆணையத்திடம் தகவல் அறியும் வழிமுறைகள், மனித உரிமை ஆணையங்களின் முகவரிகள் ஆகியன தரப்பட்டுள்ளன.
வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய வழக்குகள் பொருத்தமான இடங்களில் இந்நூலெங்கும் தரப்பட்டுள்ளன. எளிய சட்டத் தமிழில் நூல் எழுதுவதில் வல்லவரான வழக்குரைஞர் திரு பி.ஆர்.ஜெயராஜன் அவர்களின் மற்றொரு வெற்றிப்படைப்புதான் இந்நூல். அனைவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய முக்கியமான இச்சட்ட நூலை நழுவவிடாதீர்!
SPRP, Jayarajan, Shri Pathi Rajan Publishers, PRJ
Book