தமிழ்நாடு அரசாங்கத்தின் சிறந்த நூலுக்கான பரிசை வென்றெடுத்த "வங்கியியல் சட்டம்" எனும் இந்த நூல் தற்போது புதுப்பொலிவுடன், முற்றிலும் சீராய்வு செய்யப்பட்ட வடிவில் வெற்றிகரமான 6-ஆம் பதிப்பில் வெளிவந்துள்ளது. இதில் வங்கியியல் தொடர்பாக அண்மைக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு சட்டங்களும், திருத்த சட்டங்களும், சட்டமுன் வடிவுகளும் விளக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சர்ஃபாஸி எனப்படும் Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 என்ற சட்டமும், ஐடி ஆக்ட் எனப்படும் Information Technology Act 2000 என்ற சட்டமும் வங்கியியலில் கொண்டு வந்திருக்கும் பல்வேறு மாற்றமான முன்னேற்றங்களை, எளிய சட்டத் தமிழ் மொழி நடைக்கு பெயர் பெற்ற சட்டத்தமிழாய்வு அறிஞர் வழக்குரைஞர் திரு ஜெயராஜன் ஐயா அவர்கள், தனக்கே உரிய பாணியில் தெளிவாக விளக்கியுள்ளார். குறிப்பாக தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் (1) ஜன் விஸ்வாஸ் (சட்ட வகைமுறைகளின் திருத்தம்) சட்டம், 2023 செய்த திருத்தங்கள் [Amendments by the Jan Vishwas (Amendment of Provisions) Act, 2023] மற்றும் (2) - எண்ணிமமுறை தனிநபர் தகவல்தரவு பாதுகாப்புச் சட்டம் 2023 செய்த திருத்தங்கள் [Amendments by the Digital Personal Data Protection Act, 2023] திருத்தங்கள் பற்றியும் கோடிட்டு விளக்கியுள்ளார்.
வங்கியியலை பொறுத்தவரை அண்மைக்கால மாற்றங்கள் மற்றும் சட்ட திட்டங்களுடன் சட்டத்தமிழில் வெளிவந்துள்ள முதல் நூல் என இதைக் குறிப்பிடுவதில் மிகையில்லை. அதை இப்பதிப்பின் பின்வரும் விரிவான பொருளடக்கத்தை கண்டாலே விளங்கும்.
வங்கியியல் சட்டம்
1. வங்கியியலின் தன்மை மற்றும் வளர்ச்சி
[Nature and Development of Banking]
- அறிமுகம்
- வங்கி எனும் சொல் எங்கிருந்து பிறந்தது?
- வங்கியியலின் வளர்ச்சி குறித்த வரலாறு
- இங்கிலாந்து நாட்டில் வங்கியியலின் வளர்ச்சி குறித்த வரலாறு
- இந்திய நாட்டில் வங்கியியலின் வளர்ச்சி குறித்த வரலாறு
- அமைப்பிலா பிரிவு
- அமைக்கப்பட்ட பிரிவு
- சுதேசி இயக்கமும் வங்கிகளும்
- வங்கியியல் நெருக்கடி
- இந்திய இம்பீரியல் வங்கி
- சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் வங்கிகளின் வளர்ச்சி
- வங்கிகளின் மீதான சமூகக் கட்டுப்பாடு
- வங்கிகளின் தேசியமயமாக்கம்
2. வங்கிகளின் பல்வேறு வகைகள் மற்றும் அவை தொடர்பான சட்டங்கள்
[Different Types of Banks and the Specific Laws relating to them]
- வணிக வங்கிகள்
- அரசுத் துறையில் வணிக வங்கிகள்
- தனியார் துறையில் வணிக வங்கிகள்
- இந்திய வங்கிகள்
- அயல்நாட்டு வங்கிகள்
- உள்ளூர் வங்கிகள்
- கூட்டுறவு வங்கிகள்
- கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள் - வேறுபாடு
- வட்டார ஊரக வங்கிகள்
- மாநில வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கிகள்
- தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி
- இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி
- அனைத்திந்திய தொழில் மேம்பாட்டு வங்கிகள்
- மாநில அளவிலான தொழில் மேம்பாட்டு வங்கிகள்
- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக்கழகம் (வரை.)
- வீட்டு வசதி மேம்பாட்டு நிதியுதவிக் கழகம் (வரை.)
- தேசிய வீட்டு வசதி வங்கி
- இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி
- இந்திய ஏற்றுமதி கடனுதவி பொறுப்புறுதிக் கழகம் (வரை.)
- முதலீட்டு நிறுவனங்கள்
- இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்
- இந்திய பொதுக் காப்பீட்டுக் கழகம்
- இந்திய யூனிட் டிரஸ்ட்
- வைப்பீட்டுக் காப்பீடு மற்றும் கடனுதவி பொறுப்புறுதிக் கழகம்
- தனிப்பட்ட நபர்கள் செய்யும் வங்கித் தொழில்
- அட்டவணை வங்கிகளும், அட்டவணை சாரா வங்கிகளும்
- மேலமை வங்கி நிறுவனங்கள் வரைபடம்
- வங்கி நிறுவனங்கள்-வரைபடம்
3. இந்தியரிசர்வ் வங்கி (அல்லது) இந்திய சேம வங்கி (அல்லது மைய வங்கி
[The Reserve Bank of India (or) The Central Bank]
- இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டமைப்பு
- இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள்
- இந்திய ரிசர்வ் வங்கியின் கடமைகள்
- இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமைகள்
- வங்கி சாரா நிறுவனம்
- நிதி நிறுவனம்
4. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949
[The Banking Regulation Act, 1949]
- சட்டத்தின் கட்டமைப்பு
- எவ்வகையான தொழில்களில் வங்கிகள் ஈடுபடலாம்?
- எவ்வகையான தொழில்களில் வங்கிகள் ஈடுபடக்கூடாது?
- இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள்
- வங்கி நிறுவனத்தின் தொழிலை நிறுத்தி வைத்தல்
- வங்கி நிறுவனத்தைக் கலைத்தல்
- வங்கி நிறுவனங்களின் இணைப்பு
5. வங்கியரும் வாடிக்கையாளரும்
[Banker and Customer]
- வங்கியர்-வரையறை
- வாடிக்கையாளர் - வரையறை
- வங்கியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான உறவு
- பொது நிலை உறவு
- சிறப்பு நிலை உறவு (அல்லது) சட்ட நிலை உறவு
6. வங்கியரின் சிறப்பு வகை வாடிக்கையாளர்கள்
[Special Types of Bank's Customers]
- இளவர்
- பித்தர்கள்
- குடிகாரர்கள்
- கல்வியறிவற்றவர்கள்
- மணமான பெண்
- கூட்டுக் கணக்கு
- இந்து கூட்டுக் குடும்பம்
- கூட்டாண்மை நிறுமம்
- கூட்டுப் பங்கு நிறுவனம்
- நிறைவேற்றாளர்களும் நிருவாகிகளும்
- பொறுப்பாண்மையர்கள்
- தனிக்கழகங்கள், சங்கங்கள், அறப்பணி நிறுவனங்கள்
7. பல்வேறு வகையான வங்கிக் கணக்குகள்
[Different Types of Accounts]
- சேமிப்பு வங்கிக் கணக்குகள்
- நடப்புக் கணக்குகள்
- நிலை வைப்பீட்டுக் கணக்குகள்
- தொடர் வைப்பீட்டுக் கணக்குகள்
- ஒரு புதிய கணக்கை துவக்கும் முன்பு
வங்கியர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும்,
மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்
- ஏன் வாடிக்கையாளர் அறிமுகம் இன்றியமையாதது?
- செல்லேட்டின் விளக்கமும்,
அதிலுள்ள பதிவுகளின் சட்ட விளைவுகளும்
- நிலைவைப்பீட்டு இரசீது
- வங்கிக் கணக்கை முடித்தல்
- சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும்
நிலை வைப்பீட்டுக் கணக்கு - வேறுபாடுகள்
8. கடன் பெறுநராக வங்கியர்
[Banker as Borrower]
- கடன் வாங்கும் வழிமுறைகள்
- மாற்றுச் சீட்டுத் தள்ளுபடி
- பல்வேறு வகையான வைப்பீடுகள்
- உரிய தேதிக்கு முன் பணம் கொடுத்தல்
- முதிர்வடைந்த நிலை வைப்பீடுகளுக்கு பணம் திரும்பக் கொடுத்தல்
- வைப்பீடுகளை பற்றுகை செய்ய நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ஆணை
(அல்லது) பொருள் பற்றுகை ஆணை
- வருமான வரித் துறையால் வைப்பீடுகள் பற்றுகை செய்யப்படல்
9. வங்கியரின் கடமைகள்
[Duties of a Banker]
- காசோலைகளுக்கு பணம் வழங்கல் (மதிப்பளித்தல்)
- வாடிக்கையாளர் கணக்கின் இரகசியம் காத்தல்
- காசோலையின் மதிப்பை வங்கியர் தவறாக மறுத்தலும்
அதன் விளைவுகளும்
10. வங்கியரின் உரிமைகள்
[Rights of a Banker]
- பொதுப் பற்றுரிமைக்கான உரிமை
- சரிக்கட்டிக் கொள்ளும் உரிமை (அல்லது)
கணக்குகளை ஒருங்கிணைக்கும் உரிமை
- பணத்தை ஒதுக்கீடு செய்யும் உரிமை (அல்லது)
கிளேட்டன் வழக்கின் விதி
- வட்டி, சேவைக் கட்டணங்கள், இடைநிகழ்வுக் கட்டணங்கள்
ஆகியவற்றை விதிக்க உரிமை
- கணக்கை முடிக்கும் உரிமை
11. வங்கியியல் முறையாவணங்கள்
[Banking Instruments]
- வங்கித் தாள்கள்
- வங்கியரின் வரைவோலைகள்
- வைப்பீட்டு இரசீதுகள்
- கால வரையறைச் சட்டத்தின் கீழ் வங்கியரின் உரிமை
- நம்பிக்கைக் கடிதங்கள்
- பயணம் செய்வோர் காசோலைகள்
- ஈட்டுறுதிகள்
- அஞ்சல் ஆணைகள்
- பங்காதாயப் பற்றாணைகள்
- பிணையாவணங்கள்
12. செலுத்தும் வங்கியர் (அல்லது) பணம் வழங்கும் வங்கியர்
[Paying Banker]
- செலுத்தும் வங்கியர் யார்? விளக்கம்
- செலுத்தும் வங்கியரின் பொறுப்புகளும் கடமைகளும்
- செலுத்தும் வங்கியர் எடுத்துக் கொள்ள வேண்டிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- செலுத்தும் வங்கியர் காசோலைக்கு எப்போது மதிப்பு மறுக்கலாம்?
- செலுத்தும் வங்கியர் காசோலைக்கு எப்போது கட்டாயம் மதிப்பு மறுக்க வேண்டும்?
- செலுத்தும் வங்கியருக்குண்டான சட்டப்படியான பாதுகாப்பு
முன்னிடப்பட்ட மாற்றுச் சீட்டுகளுக்கு செலுத்துபவராக வங்கியர்
13. வசூலிக்கும் வங்கியர்
[Collecting Banker]
- வசூலிக்கும் வங்கியர் யார்? விளக்கம்
- வசூலிக்கும் வங்கியரின் கடமைப் பொறுப்புகள்
- மதிப்புரிமை பெற்றவராக வசூலிக்கும் வங்கியர்
- முகவராக வசூலிக்கும் வங்கியர்
- பிற முக்கியகடமைப் பொறுப்புகள்
- வசூலிக்கும் வங்கியரின் கையாடல்
- வசூலிக்கும் வங்கியரின் சட்டப்படியான பாதுகாப்பு
- வசூலிக்கும் வங்கியரின் கவனக்குறைவு
14. வங்கியரால் வழங்கப்படும் கடன்கள், முன்பணங்கள் மற்றும்
வங்கியர் செய்யும் முதலீடுகள் தொடர்பான சட்டங்கள்
[Laws relating to Loans, Advances and Insvestments by Banks]
- கடன் கொடுப்பதில் வங்கியர் மேற்கொள்ள வேண்டிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (அல்லது)
கடன் வழங்குவதின் பொதுக் கோட்பாடுகள்
- கடன் மற்றும் முன்பணங்களின் மூன்று படிவங்கள்
- மூவகைக் கடன் கணக்குகள்
- கடன் மற்றும் முன்பணங்களின் இரு பெரும் வகைகள்
- வங்கியர்களின் துணைச் சேவைகள்
- முகவாண்மைச் சேவைகள்
- பொதுப் பயன்பாட்டுச் சேவைகள்
- பாதுகாப்பு வைப்புச் சேவை
- பாதுகாப்புவைப்பீடு
- பாதுகாப்பு வைப்பீட்டுப் பெட்டகம்
- வங்கி கொள்ளையடிக்கப்படும் நேர்வில் வங்கியரின் பொறுப்பு
- வங்கியரின் பகரப் பொறுப்பு
- கடன்களையும் முன்பணங்களையும் வங்கியர் வசூலித்தல்
- வங்கிக்கு கொடுபட வேண்டிய கடன் வசூல்
15. பிரச்சனைகளும் தீர்வுகளும்
வங்கியியல் தொடர்பான இரண்டு முக்கிய சட்டங்கள்
I. சர்ஃபாஸி சட்டம், 2002-இன் மீதான விளக்கவுரைகள்
[Commentaries on the Securitisation and Reconstruction of Financial Assets and
Enforcement of Security Interest Act, 2002 (SARFAESI Act, 2002)
II. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் மீதான விளக்கவுரைகள்
[Commentaries on the Information Technology Act 2000 (IT Act, 2000)]
- திருத்தச்சட்டம் 2008 செய்த திருத்தங்கள்
[Amendments by the Amendment Act, 2008]
- சட்டமுறை ஆணை 2022 செய்த திருத்தங்கள்
[Amendments as per the Statutory Order, 2023]
- ஜன் விஸ்வாஸ் (சட்ட வகைமுறைகளின் திருத்தம்) சட்டம், 2023 செய்த திருத்தங்கள்
[Amendments by the Jan Vishwas (Amendment of Provisions) Act, 2023]
- எண்ணிமமுறை தனிநபர் தகவல்தரவு பாதுகாப்புச் சட்டம் 2023 செய்த திருத்தங்கள்
[Amendments by the Digital Personal Data Protection Act, 2023]
திருத்தச்சட்டங்களும் சட்டமுன்வடிவும்
- வங்கியியல் ஒழுங்குமுறைச்சட்டம் 1949-இல் 2017-ஆம் ஆண்டில் கொணரப்பட்ட திருத்தச்சட்டம்
The Banking Regulation (Amendment) Act, 2017
- வங்கிச்சட்டங்கள் (திருத்தச்) சட்டம், 2012 The Banking Laws (Amendment) Act, 2012
- வங்கிச்சட்டங்கள் (திருத்தச்) சட்டம், 2024 The Banking Laws (Amendment) Bill, 2024
சட்டப்பல்கலைக்கழக முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
- மூன்றாண்டு சட்டப்படிப்பு
- ஐந்தாண்டு சட்டப்படிப்பு