உரிமையியல் நீதிபதி பிரதான தேர்வுக்கு பயன் தரும் வகையில் வெளி வந்திருக்கும் இரண்டு தொகுதிகள் கொண்ட இந்த புத்தகம், தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்வு எழுதுவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தொகுதியில், முந்தைய தேர்வு வினாத்தாள்கள் (2014, 2012, 2008, 2003, 2002, 2000, 1999, 1998 மற்றும் 1997), தேர்வுக்கான பாடத் திட்டம், உரிமையியல் நடைமுறைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம், வாதுரைகளின் கோட்பாடுகள், இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆகிய பாடங்களுக்கான விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் தொகுதியில், முந்திய ஆண்டின் தேர்வு வினாத்தாள்களுக்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், வழக்கெழு வினாக்கள் வரைதல் மற்றும் உரிமையியல் வழக்குகளில் தீர்ப்புரைகள் எழுதுதல், குற்றச்சாட்டு வரைதல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் தீர்ப்புரைகள் எழுதுதல், மொழி பெயர்ப்பு பயிற்சிகள் (ஆங்கிலத்திலிருந்து தமிழில் மற்றும் தமிழிலிருந்து ஆங்கிலத்தில்) கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு புத்தகமும் உரிமையியல் நீதிபதி தேர்வு எழுதும் வழக்குரைஞ பெரு மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
குறிப்பாக முந்திய ஆண்டு தேர்வு வினாத்தாள்களை தொகுத்து விடைகளுடன் தந்துள்ளது தனிச் சிறப்பு.
வாழ்த்துகள்.
Malathi, Civil Judge, Main Exam