- "தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம்" என்ற இந்த தொகுப்பு நூலில், நாம் தமிழ்நாட்டில் பதிவு பெற்றுள்ள சங்கங்கள் தொடர்பாக தமிழக அரசு இயற்றியுள்ள பல்வேறு சட்டங்களை காண்கின்றோம்.
- அதாவது, 1983-ஆம் ஆண்டின் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 1988-ஆம் ஆண்டின் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் விதிகள், 1965-ஆம் ஆண்டின் மிக ஊதியம் வழங்குதல் சட்டம், 1972-ஆம் ஆண்டின் பணிக்கொடை வழங்குதல் சட்டம், 1952-ஆம் ஆண்டின் பணியாளர் வருங்கால வாய்ப்பு நிதி மற்றும் பல்வேறு வகையங்கள் சட்டம், 1981-ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிழைப்பூதியம் வழங்குதல் சட்டம் என தொடர்புடைய சட்டங்களை நூலாசிரியர் தமிழில் விளக்கியுள்ளார்.
- மேலும் இந்த நூலில், அரசியலமைப்பு (97வது திருத்த) சட்டம் 2011, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (திருத்த) சட்டம் எண் 4/2013, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் விதிமுறைகளும் தரப்பட்டுள்ளன.
- மொத்தத்தில் இந்நூல், கூட்டுறவு சங்க சட்டங்களின் ஊர் முழுமையான கையேடு என்றால் அதில் மிகை ஏதுமில்லை.
திருத்திய எட்டாம் பதிப்பில் வெளிவந்துள்ள இந்த நூல் கூட்டுறவு சங்கம், அதன் பணியாளர்களுக்கு பெரிதும் பயன் தரும்.
Malathi