வனச்சட்டங்கள் தொகுப்பு கையேடு (Hand Book on FOREST LAWS) என்ற இந்த நூலில் வனங்கள் மற்றும் வன உயிரினங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டதிட்டங்கள், விதிகள், அறிவிக்கைகள் ஆகியன அடங்கியுள்ளன. அவை வருமாறு,
- (1) 1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டம் (Tamil Nadu Forest Act, 1882),
- (2) வன உயிரினங்கள் (பாதுகாப்பு) சட்டம் 1972 [Wild Life (Protection) Act 1972]
- (3) வன உயிரினங்கள் (பாதுகாப்பு) (தமிழ்நாடு) விதிகள் 1975,
- (4) தமிழ்நாடு தனியார் வனங்கள் பாதுகாத்தல் சட்டம், 1949 (Tamil Nadu Preservation of Private Forests Act 1949),
- (5) தமிழ்நாடு தனியார் வனங்கள் பாதுகாத்தல் விதிகள், 1949 (Tamil Nadu Preservation of Private Forests Rules 1946)
- (6) வன உயிரினங்கள் (இடங்கடப்பு) தமிழ்நாடு விதிகள் 1991 [Wild Life (Transit) Tamil Nadu Rules 1991]
- (7) தமிழ்நாடு கருங்காலி வகை மரங்கள் (பாதுகாப்புச்) சட்டம் 1994 [Tamil Nadu Rosewood Trees (Conservation) Act 1994]
- (8) தமிழ்நாடு கருங்காலி வகை மரங்கள் (பாதுகாப்பு) விதிகள் 1995 [Tamil Nadu Rosewood Trees (Conservation) Rules 1995],
- (9) சந்தன மரம் தெரிந்தெடுத்தல், வெட்டி எடுத்தல், துலக்கும் செய்தல், வகைப்பாடு செய்தல், செலவாக்கல் ஆகியவை பற்றிய விதிகளும் சந்தனக்கிடங்குக் கணக்குகள் எழுதி வைத்து வரும் முறையும் விதிகள்,
- (10) 1871-ஆம் ஆண்டு கால்நடை அத்துமீறல் சட்டம் (The Cattle Trespass Act 1871)
- (11) விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டம் 1960 (The Prevention of Cruelty to Animals Act, 1960) -
என இவை யாவும் ஆங்கிலம் மற்றும் தமிழில் தரப்பட்டுள்ளன.
Forest Laws, ATC, வனச்சட்டம்