Law Books

தமிழ்நாடு அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள் - ஓர் தொகுப்பு நூல்

67607 Views
  • Binding : Paperback
  • Author : M.Gnanagurunathan, Advocate and ATC Radhakrishnan
  • Pages : 520
  • Publisher: ACT Book Centre
  • Edition: First Edition
  • Language: Tamil
* Out of Stock

Delivery to

Description

தமிழ்நாடு அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த நூல் தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு ஓர் சட்ட வழிகாட்டி என்று சொன்னால் அது மிகையன்று. அந்த அளவிற்கு அரசு ஊழியர் தொடர்பான பல்வேறு சட்டதிட்டங்களை இந்நூல் விளக்குகின்றது.

இந்நூலின் 1 முதல் 80 வரையுள்ள பக்கங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள் 1973-இன் (The Tamil Nadu Government Servants' Conduct Rules 1973) வகைமுறைகளை தருகின்றது. இவற்றில் 54-ஆம் பக்கம் வரை நடத்தை விதிகள் விளக்கப்பட்டு, பிறகு 55-ஆம் பக்கத்தில் பிற்சேர்க்கை என்ற தலைப்பின் கீழ் துணை விதிகள் தரப்பட்டுள்ளன. இதையடுத்து இரண்டு விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை (1) தனியார் நிறுவன வேலைக்குத் தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் விண்ணப்பிப்பதற்குரிய விதிகள் 1973 (2) பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் விண்ணப்பிப்பதற்குரிய விதிகள் 1973. இந்த இரண்டு விதிகளும் 59-ஆம் பக்கம் வரை நீடிக்கிறது.

தொடர்ந்து 60-ஆம் பக்கத்திலிருந்து நான்கு அட்டவணைகளும் அவற்றின் கீழான படிவங்களும் தரப்பட்டுள்ளன. அட்டவணை I-இல் அரசுப்பணியாளர்களிடமுள்ள சொத்துகள் மற்றும் கடன் பொறுப்புகள் பற்றிய விவர அறிக்கை என்ற தலைப்பில் 8 படிவங்கள் தரப்பட்டுள்ளன, அவை

  • (1) அரசுப்பணியாளர் உடமையாகக் கொண்டுள்ள இடம்பெயராச் சொத்து பற்றிய விவர அறிக்கை,
  • (2) அரசுப்பணியாளர் உடமையாகக் கொண்டுள்ள எளிதில் பணமாக மாற்றக்கூடிய சொத்துக்களின் விவர அறிக்கை,
  • (3)  அரசுப்பணியாளர் உடமையாகக் கொண்டுள்ள இடம்பெயர் சொத்து பற்றிய விவர அறிக்கை,
  • (4) அரசுப்பணியாளரின் வருங்கால வைப்பு நிதி மற்றும் அவர் பெற்றுள்ள ஆயுள் ஈட்டுறுதி ஆவண விவர அறிக்கை,
  • (5) அரசுப்பணியாளர்களது கடன்கள் மற்றும் பிற கடன் பொறுப்புகள் பற்றிய விவர அறிக்கை
  • (6) வீடுகட்ட அல்லது வீட்டில் கூடுதல் கட்டுமானம் செய்ய அரசின் அனுமதிக்கான அறிக்கை /விண்ணப்படிவம்
  • (7) வீட்டைக் கட்டி முடித்ததும் / வீட்டில் கூடுதல் கட்டுமானம் செய்து முடித்ததும் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டிய படிவம்.

அட்டவணை II-இல் அரசுப்பணியாளர் உடைமையாகக் கொண்டுள்ள இடம் பெயராச் சொத்து மற்றும் அச்சொத்தில் அவருடைய பங்கு பற்றிய பதிவிடும், அட்டவணை III-இல் Passport, NOC related Forms, அட்டவணை IV-இல் Dowry Declaration Form-ம் தரப்பட்டுள்ளன.

அடுத்தபடியாக தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு & மேல்முறையீடு) விதிகள் [Tamil Nadu Civil Services (Discipline & Appeal) Rules] 81-லிருந்து 103-ஆம் பக்கம் வரை தரப்பட்டுள்ளன. 104 முதல் 112 வரையிலான பக்கங்களில் குற்ற அறிக்கை தொடுத்தல் பற்றியும், 114 முதல் 120 வரையிலான பக்கங்களில் ஒழுங்கு நடவடிக்கை விசாரணை எவ்வாறு நடத்தப்பெறுகின்றது ? என்பது பற்றியும், தொடர்ந்து வரும் பக்கங்களில் விசாரணை அதிகாரிகளே ! உங்கள் கவனம் !!, விசாரணை இறுதி முடிவு, மேல்முறையீடு, மறு ஆய்வு மற்றும் மனுக்கள், துறை ஒழுங்கு நடவடிக்கை எதிர் குற்றவியல் வழக்கு நடவடிக்கை, இந்திய தண்டனை சட்டமும் அரசு ஊழியரும், பணியறவு, பணி அகற்றுகை & கட்டாய ஓய்வு, பணி இடை நீக்கம், பணி ஓய்வு, வேலை நிறுத்தமும் அரசு ஊழியரும் ஆகிய தலைப்புகளின் கீழ் பல்வேறு சட்ட திட்டங்கள், விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் (1) Preparation of Panel & Promotion Related G.O.s (2) துறை விசாரணைகள் (சாட்சிகளை மற்றும் ஆவணங்கள் முன்னிலை) சட்டம் 1972, (3) தமிழ்நாடு தகவல் ஆணையம் விசாரணை முடிவுகளும் ஆகியன 368-ஆம் பக்கம் வரை தரப்பட்டுள்ளன.

இவற்றையடுத்து (1) பணியிடங்களில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடையுறுத்தும் மற்றும் குறைதீர்) சட்டம் 2013 (Sexual Harassment of Women at Work Place (Prevention, Prohibition and Redressal) Act 2013] (2) பணியிடங்களில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடையுறுத்தும் மற்றும் குறைதீர்) விதிகள் 2013 [Sexual Harassment of Women at Work Place (Prevention, Prohibition and Redressal) Rules 2013] (3) தமிழ்நாடு தொழிற்சாலை விதிகள், 1950 (Tamil Nadu Factories Rules, 1950) ஆகியன 432-ஆம் பக்கம் வரை தரப்பட்டுள்ளன.

தொடர்ந்து வரும் பக்கங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நடத்தை தொடர்பாக அவ்வப்போது தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகள் இடம் பெற்றுள்ளன. நிறைவாக "ஊழல் குற்றச்சாட்டுகள் - அரசின் முன் அனுமதி" என்ற தனித்தலைப்பின் கீழ் நூலின் இறுதி வரை பல்வேறு தீர்ப்புரைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

நூலின் ஆரம்பத்தில் தனியாக சேர்க்கப்பட்ட 11 முதல் 16 வரையிலான பக்கங்களில் ''தண்டனைகளும் பணி உரிமை பாதிப்புகளும்'' என்ற தலைப்பின் கீழ் அரசு ஊழியருக்கு தரப்படும் தண்டனையால் ஏற்படும் கேடு தரும் விளைவுகள், பணி உரிமை இழப்புகள் பற்றி அட்டவணை வடிவில் விளக்கப்பட்டுள்ளன.

ஆக மொத்தம் இந்த நூல் தமிழ்நாடு அரசு ஊழியர் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் என்று சொன்னால் அதில் மிகை ஏதும் இல்லை என்பதை இந்நூலை வாசிக்கும் அனைவரும் சொல்வர்.

வாழ்த்துகள் ...!

 

ATC

 

 

 

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books