"ஊராட்சி நிர்வாகம் கையேடு" என்ற பெருந்தலைப்பில் வெளியாகி இருக்கும் இந்த புத்தகம், கிராம ஊராட்சியை நிருவகிக்கும் தலைவர், செயல் அலுவலர், ஊராட்சி உதவியாளர்கள், உறுப்பினர்கள், கிராம சபை மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் என ஊராட்சி தொடர்புடைய அனைவருக்கும் ஓர் வரப்பிரசாதமான புத்தகம் என்ற கூற வேண்டும்.
இந்த புத்தகத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு இது மேற்படியார்கள் அனைவருக்கும் ஒரு அருமையான கையேடு என்பதை இதன் பொருளடக்கத்தை கண்டாலே யாரும் அறிந்து கொள்ளலாம். அதாவது 384 பக்கங்கள் கொண்டு பெரிய (கிரவுன்) அளவில் வெளியாகியிருக்கும் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் ஊராட்சி நிருவாகம் தொடர்பான சட்ட திட்டங்கள், விதிமுறைகள், விளக்கங்கள், திட்டங்கள் ஆகியன பின்வரும் பொருளடத்தில் 30 அத்தியாயங்களின் கீழ் தரப்பட்டுள்ளன.
1. கிராம ஊராட்சியின் முக்கிய கடமைகள் மற்றும் பொறுப்புகள்
2. கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலரின் பொறுப்புகள் மற்றும் கடமைகள்
3. கிராம ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளரின் பணி நிபந்தனைகள், நிர்வாக கட்டுப்பாடுகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள்
4. கிராம ஊராட்சிகளால் நடத்தப்படும் கூட்டங்கள் விவரம்
5. கிராம சபை
6. கிராம ஊராட்சிக் குழுக்கள்
7. கிராம ஊராட்சிக்கான வருவாய் இனங்கள்
8. கிராம ஊராட்சிகளின் வரவு செலவு திட்டம்
9. கிராம ஊராட்சிகளில் கையாளப்படும் கணக்குகளின் வகைகள் மற்றும் ஊராட்சிகளின் கணக்கு பராமரிப்பு முறைகள்
10. ஊராட்சி தணிக்கை முறைகள்
11. ஊராட்சிகளில் பணிகள் செயல்படுத்துதல்
12. தெருவிளக்குகள் பராமரித்தல்
13. கைப்பம்பு மற்றும் விசைப்பம்புகள் பராமரித்தல்
14. ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் பொறுப்பிலுள்ள பாழடைந்த கட்டிடங்களை இடிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்
15. சமுதாய சொத்துகள்
16. கிராம ஊராட்சித் தலைவரை பதவியிலிருந்து நீக்குதல்
17. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டைகள் அமைத்தல்
18. தனிநபர் இல்லக் கழிப்பறை
19. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் - தமிழ்நாடு மணிலா வேலை உறுதி மன்றத்தினை மாற்றியமைத்தல்
20. தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (THAI)
21. ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
22. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்
23. தன்னிறைவு திட்டம்
24. முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்
25. ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்களை சீரமைக்கும் திட்டம்
26. இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம்
27. முழு சுகாதார இயக்கம்
28. நிர்மல் கிராம புரஸ்கார் விருது
29. நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம்
30. மகளிர் திட்டம்
ஊராட்சி நிருவாகம் தொடர்பானவர்கள் எப்போது கையில் வைத்திருக்க வேண்டிய, தேவைப்படுகின்ற பொழுதெல்லாம் புரட்டிப்பார்த்து வாசித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் இந்த புத்தகத்தை நழுவவிட வேண்டாம்.
ATC, Panchayat, President, Village