Law Books

சட்டத்தின் இமைகளுக்குள் கயல் விழிகள் (பெண்களைப் பாதுகாக்கும் பல்வேறு சட்டங்கள் அடங்கிய தொகுப்பு நூல் இது)

53421 Views
₹ 290
  • Binding : Paperback
  • Author : Dr. S.S.P.Dharvesh
  • Pages : 150
  • Publisher: C.Sitaraman and Co. Pvt. Ltd.
  • Language: Tamil
  • AVAILABLE : Only 1 Left

Delivery to

Description

''சட்டத்தின் இமைகளுக்குள் கயல் விழிகள்'' என்னும் இந்த தலைப்பு எதைக் குறிக்கின்றது என்றால் கண்களுக்கு தீமை வராமல் காக்கின்ற இமைகளை போல பெண்களுக்கு தீமை வராமல் காக்கும் பல்வேறு சட்டங்களைக் குறிக்கின்றது. இந்த நூல் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துரைக்கின்றது; விளக்கமாக பேசுகின்றது.

பல்வேறு மத திருமண சட்டங்களின் கீழ் பெண்களுக்கு உள்ள திருமண உரிமைகள் என்ன, வாழ்க்கைப்பொருளுதவி, சொத்துரிமை என்னென்ன என்று விளக்கம் தருகின்றது இந்த நூல். குறிப்பாக இசுலாமிய பெண்களின் சொத்துரிமை, கிறிஸ்துவ பெண்களின் சொத்துரிமை ஆகிய பகுதிகள் அனைவரும் வாசித்து தெரிந்து கொள்ளவேண்டியவை. இவை ஒரு புறம் என்றால்,

  • குடும்பநல நீதிமன்றங்களின் பணிகள்,
  • வரதட்சணை தடுப்பு,
  • வீட்டு வன்முறையில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் சட்டம்,
  • பெண் சிசு கொலை தடுப்பு சட்டம்,
  • கருவை மருத்துவ முறையில் கலைப்பதற்கான சட்டம்,
  • சிறப்பு திருமண சட்டம்,
  • தத்தெடுப்பு சட்டங்கள்,
  • மனித உரிமை பாதுகாப்பு சட்டம்,
  • பெண் தொழிலார் நலம்,
  • பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்க விபச்சாரத் தடைச்சட்டம்,
  • பெண்களை இழிவாக சித்தரிப்பதற்கு தடை செய்யும் சட்டம்,
  • பெண்களை தொல்லை செய்தல் தடுப்பு சட்டம்,
  • தகவல் தொழில் நுட்ப சட்டம்,
  • பெண்களை புலன் விசாரணை செய்தல்,
  • இலவச சட்ட உதவி,
  • இசைவு தீர்ப்பு முறை சட்டம்,
  • பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் ஜீவனாம்சம் மற்றும் நலச் சட்டம்,
  • பாலியல் குற்றங்களிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்,
  • பெண்கள் மீது அமிலம் வீச்சு மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டம்,
  • இந்தியத் தண்டனை சட்டம்

இப்படி எண்ணற்ற, பெண்களின் பாதுகாப்பிற்கு வகைமுறைகளைக் கொண்ட சட்டதிட்டங்களை இந்த நூல் தெளிவுற விளக்குகின்றது.

இந்த கண்ணோட்டத்தில் இந்த நூலை எழுதிய ஆசிரியர் திரு. தர்வேஷ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

 

Sita, Dharvesh, Kayal, Woman

 

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books