Patients' Rights in India (இந்தியாவில் நோயாளர்களின் உரிமைகள்) என்ற இந்த ஆங்கில நூல் நோயாளர்களுக்கு உள்ள உரிமைகளை பல்வேறு தலைப்புகளில் படம் பிடித்துக்காட்டுகின்றது. குறிப்பாக சட்டப்படியாகவும் அதே நேரத்தில் மருத்துவ தொழில் நெறியின்படியும் நோயாளர்களுக்கு கிடைக்கத்தக்க உரிமைகளை தொகுத்து தருகின்றது என்றால் அது மிகையன்று.
அது சரி யார் இந்த நூலை எழுதி இருக்க முடியும் ? நீங்கள் ஊகிப்பது சரிதான், திரு முகம்மது காதர் மீரான் என்ற ஒரு மருத்துவர்தான் இந்த நூலை படைத்துள்ளார். நோயாளர்களின் உரிமைகள் எனும் பொழுது அவை மருத்துவர்களுக்கு அல்லது மருத்துவமனைக்கு எதிராகத்தானே இருக்கும் என்று நீங்கள் நினைப்பதும் சரிதான். ஆனால் இந்த நூலுக்கு அணிந்துரை தந்து மகிழ்ந்த மரு.நிதின் கங்கனே அவர்கள், இது மருத்துவர்களுக்கோ அல்லது உடல் ஆரோக்கியம் பேணும் தொழிலுக்கோ எதிரானதல்ல என்றும், இது மருத்துவர்களை, மருத்துவ தொழிலை மேலும் பொறுப்புடையதாக, ஒளிவு மறைவற்றதாக ஆக்குகின்றது என்றும் குறிப்பிடுகின்றார்.
அவர் கூறுவது உண்மையே. மற்றவருக்கு எதிராக ஒருவருக்கு ஒரு உரிமை உள்ளது என்று சொன்னால், சட்டவியல் கோட்பாடுபடி அந்த உரிமையை வழங்க வேண்டிய கடமை அம்மற்றவருக்கு உண்டு. மருத்துவர், செவிலியர் அல்லது மருத்துவமனை நிருவாகம் தங்கள் கடமைகளை செவ்வனே செய்தால் நோயாளர்களின் உரிமைகள் தானாகவே நிறைவு பெறும். எனவே நோயாளர்களின் உரிமைகளை இந்த நூலில் வாசிக்கும் போது அவை யாவும், மருத்துவர் அல்லது மருத்துவ தொழிலின் கடமையாக இருக்கும் என்பது இங்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
சரி... இந்த நூலில் அப்படி நோயாளர்களுக்கு உள்ள உரிமைகள் என்னென்ன என்று நூலாசிரியர் மரு. முகம்மது காதர் மீரான் அவர்கள் பின்வருமாறு பட்டியலிட்டு காட்டுகின்றார்.
இவ்வாறு நோயாளர்களின் உரிமைகள் பட்டியல் நீள்கின்றது. எனினும் முன்பே சொன்னது போல், உரிமைகள் என்று பேசும் பொழுது கடமைகளை மறத்தலாகாது. அந்த வகையில் இந்த நூலில் நோயாளர்களுக்கு உள்ள கடமைகளையும் தந்துள்ளார் மரு. காதர் மீரான்.
இந்த நூலில் ஆங்கில பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவ நோயாளர்களுக்கான உரிமைகள் மட்டுமல்லாது, ஆயுர்வேதம், சித்தா, யுனானி ஆகிய இயற்கை மருத்துவ நோயாளர்களுக்கு உள்ள உரிமைகளையும் விளக்கும் நூலாசிரியர் திரு மீரான், பின்வரும் பல்வேறு முக்கிய கேள்விகளுக்கும் விடை பகர்கின்றார். அவை,
நிறைவாக சொல்வதெனில், இந்த நூலை நோயாளர்கள் தங்களுக்கு உள்ள உரிமைகளை அறிந்து கொள்ள உதவும் ஓர் திறவுகோல் எனலாம். அதே நேரத்தில் மருத்துவர்கள், மருத்துவமனை நிருவாகம், மருத்துவ தொழில் ஆகியவற்றுக்கு இந்த நூல் தம்மை இன்னும் செம்மைப்படுத்திக் கொள்ள உதவும் ஓர் உரைகல் எனலாம்.
அனைவர் வீட்டிலும், மருத்துவமனையிலும் இருக்க வேண்டிய ஓர் அற்புத ஆங்கில நூல்.
- வழக்குரைஞர் பி.ஆர்.ஜெயராஜன்.