இது காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை - ஆண், பெண் மற்றும் திருநங்கை) பதவிகளுக்காக பொது விண்ணப்பதாரர்களுக்கென தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2022-இல் நடத்தும் நேரடித் தேர்வுக்கான சிறப்பு கையேடு ஆகும்.
இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இக்கையேட்டின் பகுதி I-ல் தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான பாடங்கள் தரப்பட்டுள்ளன. இத்தேர்வு பொது மற்றும் 20 விழுக்காடு துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பொதுவான தேர்வு ஆகும். அடுத்து பகுதி II-ல் முதன்மை எழுத்து தேர்வுக்கான பாடங்கள் பொது அறிவு மற்றும் உளவியல் தேர்வு என இரண்டு தலைப்புகளில் இக்கையேட்டில் தரப்பட்டுள்ளன.
'பொது அறிவு' எனும் பாடத்தலைப்பில்
ஆகியன தரப்பட்டுள்ளன.
'உளவியல் தேர்வு' எனும் பாடத்தலைப்பில்
ஆகியன விவரிக்கப்பட்டுள்ளன.
எனவே இந்த கையேட்டை தமிழ் மொழி தகுதி (10 அலகுகள்), பொது அறிவு (6 பிரிவுகள்), உளவியல் (5 பிரிவுகள்) ஆகிய பாடங்கள் அடங்கிய "முப்பெரும் பாட வழிகாட்டி" (3 in 1 Guide) என்று கூறினாலும் தகும்.
வெறும் பாடங்கள் மட்டுமா...? இல்லை இல்லை... அம்முப்பெரும் பாடங்களிலிருந்து 8000 கொள்குறி வினா விடைகள் தரப்பட்டுள்ளன. அத்துடன் பயிற்சி செய்து பழகுவதற்கு மாதிரி வினாத்தாள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக 2019, 2018, 2010, 2015 ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள் விடைகளும் தரப்பட்டுள்ளன.
இவ்வாறு காவல் சார்பு ஆய்வாளர் தேர்வின் வெற்றிக்கு வழிகாட்டும் எல்லா அம்சங்களையும் இக்கையேடு கொண்டுள்ளது என்று சொன்னால் அதை மறுக்கவியலாது.
தேர்வெழுதுவோர் வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டுமே தனது தாரக மந்திரமாக கொண்டு, பல்வேறு அரசுப் பதவிகளுக்கான கையேடுகளை வடிவமைத்து வெளியிட்டு வரும் சக்தி பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் அயராத உழைப்பின் விளைபலன்தான் இந்த சிறப்புக் கையேடு என்று சொன்னால் அதில் மிகை இல்லை.
தேர்வில் வெற்றி பெற இனிய வாழ்த்துகள்.
Sakthi, SI Exam, Guide, Open, General Quota, Transgender, Sakthi 405