சார்நிலை அலுவலர் கணக்கு தேர்வு பகுதி I-க்கு புதிய தேர்வு முறையின்படி (Revised Pattern) வெளிவந்துள்ள இந்த புத்தகத்தில் முந்தைய ஆண்டுகளில் நடந்த விரிவாக விடையளிக்கும் வகை வினாத்தாள்கள் (Descriptive Type) தரப்பட்டுள்ளன. இந்த தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம் (With Books); இவற்றில் ஊதிய நிர்ணயம், ஓய்வூதியம், விடுப்பு கணக்குகள் தொடர்பாக கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகள் தரப்பட்டுள்ளன. அதே நேரம் கொள்குறி வகை தேர்வுக்கு (Objective Type) வினாத்தாள்களும் அவற்றுக்கான விடைகளும் தரப்பட்டுள்ளன (Without Books). அவ்வாறு இந்த புத்தகத்தில்
ஆகிய காலகட்டங்களில் நடந்த தேர்வு வினாத்தாள்கள் தரப்பட்டுள்ளன.
இவற்றில் ஆகஸ்ட் 2021 வினாத்தாள் தொடங்கி அடுத்து வரும் வினாத்தாள்கள் யாவும் புதிய தேர்வு முறையின்படி அமைந்தவையாகும்.
சீரமைக்கப்பட்ட இந்த புதிய தேர்வு முறையின்படி விரிவாக விடையளித்தல் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள் எனவும், கொள்குறி வகை வினாக்கள் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் எனவும் மாற்றப்பட்டுள்ளது. முன்பு (டிசம்பர் 2017 முதல் டிசம்பர் 2020 வரையிலான தேர்வுகளில்) இது முறையே 60 : 40 என இருந்தது.
இந்த புத்தகம் துறைசார் கணக்கு தேர்வு எழுதும் சார்நிலை அலுவலர்களுக்கு ஓர் விடிவெள்ளி எனலாம்.
நல்வாழ்த்துகள்.
ATSO, ATC 187, Account Test, TC 124