தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (2022) நடத்தும்
(1) இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ் நாடு காவல்படை)
(2) இரண்டாம் நிலை சிறைக்காவலர்
(3) தீயணைப்பாளர்
ஆகிய பதவிகளுக்கான இந்த சிறப்புக் கையேடு இரண்டு பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பகுதி I-ல் தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கு (அ) இலக்கணம், (ஆ) இலக்கியம், (இ) தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் என்ற உட்பகுதிகளின் கீழ் 10 அலகுகளில் விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறி வினா விடைகள் தரப்பட்டுள்ளன. மேலும் 2022 தேர்வு வினாத்தாள் விடைகளுடன் (சார்பு ஆய்வாளர்) கொடுக்கப்பட்டுள்ளது.
பகுதி II என்பது (அ) பொது அறிவு என்றும், (ஆ) உளவியல் என்றும் இரு பெரும் உட்பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. (அ) பொது அறிவு பகுதியில்,-
(1) இயற்பியல்,
(2) வேதியியல்
(3) உயிரியல்
(4) சூழ்நிலையியல்
(5) உணவு மற்றும் ஊட்டச்சத்தியியல்
(6) வரலாறு
(7) புவியியல்,
(8) இந்திய அரசியல்,
(9) பொருளாதாரம்
தொடர்பான பாடங்கள் மற்றும் கொள்குறி வகை வினா விடைகள் தரப்பட்டுள்ளன.
அடுத்து (ஆ) என்ற உட்பகுதி உளவியல் பற்றி பின்வரும் தலைப்புகளில் பாடங்கள் மற்றும் கொள்குறிவகை வினா விடைகளைத் தருகின்றன.
(1) தொடர்பு/தொடர்புகொள் திறன்
(2) எண் பகுப்பாய்வு
(3) தருக்க பகுப்பாய்வு
(4) அறிவாற்றல் திறன்
(5) தகவல்களை கையாளும் திறன்
இவை மட்டுமல்லாது 2020, 2019, 2018, 2017, 2013, 2012, 2010, 2009, 2008 ஆகிய ஆண்டுகளில் நடந்த முந்தைய தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன. மேலும் பயிற்சி செய்து பழகுவதற்கு 5 மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன.
இவ்வாறு,-
தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கு 10 அலகுகள்,
பொது அறிவுக்கு 9 பிரிவுகள்,
உளவியல் தேர்வுக்கு 5 பிரிவுகள்
என மூன்றையும் ஒரே கையேட்டில் (3 in 1 Guide) அடக்கி விளக்கமான வகையில், அதே நேரம் நியாயமான விலையில் வெளிவந்திருக்கும் இந்தக் கையேடு, முன் சொன்னதைப்போல ஓர் சிறப்புக் கையேடு மட்டுமல்ல, தேர்ச்சிக்கு நிச்சயம் வழிகாட்டும் ஓர் விடிவெள்ளி என்று சொன்னால் அது மிகையன்று.
நல்வாழ்த்துகளுடன் - ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ்.